வேடிக்கையால் நேர்ந்த விபரீதம்: கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து 4 பேர் பலி

மத்தியப்பிரதேசத்தில் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து உள்ளே விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்.
மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர்.


மத்தியப்பிரதேசத்தில் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்து உள்ளே விழுந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், 19 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மத்தியப்பிரதேசம் மாநிலம், விதிஷா மாவட்டம் கஞ்ச்பசோதா பகுதியில் வியாழக்கிழமை இரவு கிணற்றில் தவறி விழுந்த 8 வயதி சிறுமியை மீட்கும் பணியை வேடிக்கை பார்ப்பதற்காக கிணற்றில் அருகில் அதிகமானோர் கூடியதால் அதிக பாரம் தாங்காமல் கிணற்றின் சுற்றுச்சுவர் உடைந்ததால் சுற்றி நின்றிருந்த 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்து காயமடைந்தனர். இதில், 4 பேர் உயிரிழந்தனர். 

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஜேசிபி இயந்திரம்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிர நடவடிக்கையால் 19 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 

மீட்பு வடவடிக்கைகளை கண்காணித்து வரும் அமைச்சர் விஸ்வாஸ் சாரங்

சம்பவம் குறிந்து தகவல் அறிந்த மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக என பதிவிட்டுள்ளார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள மீட்புப் படையினர். 

முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அம்மாநில மருத்துவத்துறை அமைச்சர் விஸ்வாஸ் சாரங் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தி தொடர்ந்து மீட்பு வடவடிக்கைகளை கண்காணித்து வருகிறார். 
 
இதற்கிடையில், காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) விநாயக் வர்மா தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com