'பிறரது பழைய ஆடைகளையே பயன்படுத்துகிறேன்; புதிதாக வாங்குவதில்லை'

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஆடைகளை  வாங்கியதாக சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். 
கிரேட்டா துன்பெர்க்
கிரேட்டா துன்பெர்க்


மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புதிதாக ஆடைகளை  வாங்கியதாக ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார். 

'வோக் ஸ்கேண்டினாவியா' என்ற இதழின் முதல் பிரதி அட்டைப் படத்தில் கிரேட்டா துன்பெர்க் படம் இடம்பெற்றுள்ளது. 

இதில் மிகப்பெரிய உடையை அணிந்துகொண்டு காட்டில் குதிரையை தடவிக்கொடுப்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து பேசிய அவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு புதிய ஆடைகளை வாங்கினேன். ஆனால் அவை ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட இன்னொருவரின் ஆடைகள் தான்.

எனக்குத் தேவையான பொருள்களை எனக்கு அறிமுகமானவர்களிடமிருந்தே பெற்றுக்கொள்கிறேன். புதிதாக வாங்குவதில்லை.

வேகமான கலாசார மாறுபாட்டால் உடைகளை அணிவதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சிக்காக உடைகளை வாங்குவதும் உற்பத்தி செய்வதும் அதிகரித்துள்ளது. ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சுற்றுச்சூழல் அவசரநிலையில் முக்கியப் பங்கு உள்ளது என்று தமது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com