பொற்பனைக்கோட்டை அகழாய்வில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் கண்டெடுப்பு!

புதுக்கோட்டை அருகே பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு வியாழக்கிழமை காலை வெளிக்கொணரப்பட்டுள்ளது.
பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் வெளிக்கொணரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு. 

புதுக்கோட்டை அருகே சுமாா் 10 கி.மீ தொலைவில் வேப்பங்குடி ஊராட்சிக்குள்பட்ட பொற்பனைக்கோட்டையில் கடந்த ஜூலை 30 ஆம் தேதி தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் சாா்பில் அகழாய்வுப் பணிகள் தொடங்கின. பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியா் இனியன் தலைமையிலான குழுவினா் கடந்த 13 நாள்களாக அகழாய்வில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா்.

ஏற்கெனவே சங்க காலக் கோட்டை இருந்தற்கான, சுமார் 1.63 கிலோமீட்டர் நீளத்தில் வட்டவடிவிலான சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடையாளங்களைக் கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த அகழாய்வுக் குழிகளில் இரும்பாலான இரும்புக்கொக்கி ஒன்று கிடைத்த நிலையில், உடைந்த ’மண் பானைகள்’, குடுவை மூடியில் பொருத்தப்பட்டிருக்கும் மேல்பகுதி, பொழுதுபோக்குக்காக - விளையாட்டுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படும் ‘வட்டச்சில்லு’ ஆகிய பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

பொற்பனைக்கோட்டையில் நடைபெற்றுவரும் அகழாய்வுப் பணியில் வெளிக்கொணரப்பட்ட செங்கற்களால் கட்டப்பட்ட கால்வாய் போன்ற அமைப்பு. 

இதன் தொடர்ச்சியாக சுமார் இரண்டரை அடி ஆழத்தில் செங்கற்களால் ஆன கால்வாய் கட்டமைப்பு போன்ற ஒன்று வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இன்னும் சில நாள்களில் மேலும் இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பணிகளில் முழுமையான கட்டமைப்பு வெளிப்படலாம் என அகழாய்வுக் குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கட்டுமானப் பகுதி வெளிக்கொணரப்பட்டுள்ளது அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல, அகழாய்வுக்கு வெளியே பொற்பனைக்கோட்டையின் மேற்பகுதியில் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் அதன் நிறுவனர் ஆ. மணிகண்டன் தலைமையிலான குழுவினர் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் மேற்குப்புற அகழிமேட்டில் சுடுமண் மேற்கூரை ஓடுகள், மதுக்குடுவையை ஒத்த அடிப்பாகம் ஆகியன கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com