மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,649 கன அடியாக அதிகரிப்பு
By DIN | Published On : 13th August 2021 09:11 AM | Last Updated : 13th August 2021 09:11 AM | அ+அ அ- |

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 8,649 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8,649 கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை தனிந்ததால் கர்நாடகா அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்பட்டு வரும் நீரின் அளவும் கணிசமாக குறைக்கப்பட்டது. இதனால் வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 8,603 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 8,649 கன அடியாக அதிகரித்தது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 73.37அடியிலிருந்து 72.77அடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 14,000 கன அடி நீரும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 35.12 டி.எம்.சியாக இருந்தது.