மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன் உள்பட ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் எஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன்


சென்னை: மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன் உள்பட ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும் எஎன தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, சட்டப்பேரவையில் தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டு வருகிறது.  தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 5,500 கோடி கரோனா சிறப்பு கடன் உள்பட ரூ.20,000 கோடி கடன் உறுதி செய்யப்படும். 

* 36,218 சுய உதவிக்குழுக்கள் பயன்பெறும் வகையில், ரூ.809.71 கோடி செலவில் ஊரக வாழ்வாதார திட்டம் செயல்படுத்தப்படும்.

* 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக உயர்த்தவும், ஊதியத்தை ரூ.300 வழங்கவும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com