தில்லி எல்லைகளில் இணைய சேவை துண்டிப்பு: நாளை(பிப்.2) வரை நீட்டிப்பு

விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும், காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைகளில், மேலும் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை முடக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் நீட்டித்துள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகா் தில்லியின் எல்லைப் பகுதிகளான சிங்கு, டிக்ரி, காஜிப்பூா் பகுதிகளில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாகப் போராட்டம் நடத்தி வருகிறாா்கள்.

தில்லியின் எல்லைப் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழலைத் தடுக்கும் வகையில், பொது அவசரநிலை, பொது பாதுகாப்பு சட்ட விதிகளின் கீழ் இப்பகுதிகளில், ஜனவரி 29ஆம் தேதி முதல் இணைய சேவையை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கியது.

இந்நிலையில் இன்று மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 

தில்லி எல்லைகளான காஜிப்பூா், சிங்கு, டிக்ரி பகுதிகளில் பிப்ரவரி 2ஆம் தேதி நள்ளிரவு 11 மணி வரை இணைய சேவை முடக்கமானது நீட்டிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com