நாட்டில் சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கமளிக்கப்படுகிறது: பிரதமர்
By DIN | Published On : 17th February 2021 05:39 PM | Last Updated : 17th February 2021 05:51 PM | அ+அ அ- |

நரேந்திர மோடி
மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களுக்கு தில்லியில் இருந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது, மாற்று எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க சூரிய மின் உற்பத்திக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.
இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு மாற்று எரிசக்தி வழிகள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். சூரிய மின்சக்தியில் இயங்கும் மோட்டார்கள் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கின்றன என்று கூறினார்.