கிருஷ்ணகிரியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆய்வு

கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.
கிருஷ்ணகிரியில் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி.


கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது, நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவர்  பேசியது:  மனித சக்தியை காட்டிலும் இயற்கை வலிமையானது என்பதை இந்தக் கரோனா தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது. இதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். 

நீதித்துறையில் பணியாற்றுபவர்கள்  உள்ளிட்ட அனைவரும் ஒரு குடும்ப உறுப்பினர்கள் என்பதை உணர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த வளாகத்தில் மரக்கன்றை நடவு செய்த அவர், மையப்படுத்தப்பட்ட தாக்கல் மையத்தை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆர். விஜயகுமாரி, மகளிர் விரைவு நீதிமன்ற அமர்வு நீதிபதி வி.ஆர். லதா, குடும்ப நல நீதிபதி எம். செல்வம், மோட்டார் வாகன தீர்ப்பாய சிறப்பு மாவட்ட நீதிபதி டி.வி. மணி, சிறப்பு சார்பு நீதிபதி எஸ். ராஜா மகேஷ்  முதன்மை குற்றவியல் நடுவர் ராஜசிம்மவர்மன், முதன்மை சார்பு நீதிபதி பி.கணேசன், கூடுதல் சிறப்பு நீதிபதி சி.குமார வர்மன்,  குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - 2, நீதிபதி   பீட்டர் மற்றும் வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள்  வழக்குரைஞர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com