பள்ளிக் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவது எப்போது? - முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பள்ளிக்குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்
முதல்வா் மு.க.ஸ்டாலின்


சென்னை: பள்ளிக்குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுதல் குறித்து இன்னும் மருத்துவ வல்லுநர்கள் முடிவுகள் எடுக்கவில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், "ஊரடங்கு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும். குழந்தைகளுக்கான தடுப்பூசி ஆலோசனைகள் நடந்துகொண்டிருக்கின்றன. எல்லா தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கவேண்டும்.

தடுப்பூசி- மக்கள் இயக்கம்அப்படி செலுத்துவதை மக்கள் இயக்கமாகவே மாற்றுவதற்கு அரசு தயாராக இருக்கிறது. முழுமையான அளவுக்குத் தடுப்பூசிகள் கிடைக்காத நிலையில் மக்கள் இன்னும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருந்தாகவேண்டும். 

கரோனாவை வெல்வதற்குத் தடுப்பூசிதான் மிகப்பெரிய ஆயுதமும் கேடயமும். தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் முழுமையாக நாம் இன்னும் தடுப்பூசி போட்டு முடிக்கவில்லை. மத்திய அரசால் நமக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியைப் போட்டுள்ளோம். அவர்களும் முழுமையாக நமக்கு வழங்கவில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார். 

தளர்வுகள் அறிவித்துவிட்டார்கள் அதனால் நாம் எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை என்று யாரும் நினைக்கக் கூடாது. இன்னமும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. அரசியல், சமுதாய விழாக்கள் அனுமதிக்கப்படவில்லை. திரையரங்குகளைத் திறக்கவில்லை. பூங்காக்களைத் திறக்கவில்லை. ஏனென்றால், இவை எல்லாம் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்கள் என்பதால் திறக்காமல் இருக்கிறோம் என்ற காரணத்தை உணர்ந்து மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். 

உணவகம், கடைகள் மற்ற முக்கிய சேவைகள், பொதுப்போக்குவரத்து, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு அனுமதி தருவதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்தின் மீது உள்ள அக்கறையால்தான். மேலும், மக்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே சுயக்கட்டுப்பாட்டை விதித்துக்கொள்ளவேண்டும். அவசியத்தின் காரணமாக மட்டுமே வெளியில் வாருங்கள். அப்படி வரும்போது கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும்" என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com