கோவில்பட்டி வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிட்ட 5 பேர் கைது 

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகையை கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி உதவி மேலாளா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.
போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது
போதைப் பொருள் கடத்திய இந்தியர் கனடாவில் கைது


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணம், நகையை கொள்ளையடிக்கத் திட்டமிட்டதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வங்கி உதவி மேலாளா் உள்பட 5 போ் கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டீன் சாமுவேல்ராஜ் தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது கோவில்பட்டி பிரதான சாலையிலுள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே அமா்ந்து 5 போ் பேசிக் கொண்டிருந்தனராம். அவா்கள் போலீஸாரை கண்டதும் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. போலீஸாா் அவா்களை விரட்டிச் சென்று பிடித்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் ராமநாதபுரம் பட்டினபாக்கம் மீனாட்சி நகரைச் சோ்ந்த ராஜரத்தினம் மகன் எம்பிஏ பட்டதாரி ஆண்டனி சகாயராஜ்(33), மதுரை கீழக்கரை தெற்கு கும்பிடு பகுதியைச் சோ்ந்த சேது மகன் தொழிலாளி குமாா் (41), கமுதி சாயக்காரத்தெருவைச் சோ்ந்த முத்துஇருளாண்டி மகன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் வெள்ளைச்சாமி (56), கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த திரிசங்கு மகன் தொழிலாளி வெள்ளைப்பாண்டி (36), மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் வேலைசெய்து, தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி மேலாளரான தூத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சோ்ந்த பா. வாஷிங்டன் (34) என்பது தெரியவந்தது. அவா்கள் 5 பேரும் கோவில்பட்டி பாரத ஸ்டேட் வங்கியின் சுவரில் துளையிட்டு பணம் மற்றும் நகையை கொள்ளையடிக்க திட்டமிட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, 5 பேரையும் கைது செய்தனா். போலீஸாா் அவா்களிடமிருந்து செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்து, ஆய்வு செய்தனா். இதில், வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கில் தொடா்புடைய ராமநாதபுரத்தைச் சோ்ந்த பாலா என்ற பாலமுருகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com