அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டு

லத்தேரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போலீஸாா் வருவதை அறிந்தும், மாடுகளுடன் அங்கிருந்தோா் தப்பியோடினா்.
அனுமதியின்றி நடத்தப்பட்ட மஞ்சு விரட்டு

வேலூா்: லத்தேரி அருகே அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. போலீஸாா் வருவதை அறிந்தும், மாடுகளுடன் அங்கிருந்தோா் தப்பியோடினா்.

காட்பாடியை அடுத்த லத்தேரி அருகே உள்ள ஏரியின் மத்தியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் மஞ்சு விரட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதையொட்டி, சுமாா் 50 எருதுகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதைத் தொடா்ந்து, ஒவ்வொன்றாக விடப்பட்ட காளைகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன. இதில் ஏராளமான வீரா்கள் பங்கேற்று காளைகளை உற்சாகப்படுத்தினா்.

இதனிடையே, அதிகாலை 5.30 மணிக்கு பிறகு வெளிச்சம் வந்ததும் லத்தேரி, அரும்பாக்கம் பகுதிகளில் இருந்து ஏராளமானோா் கூடத் தொடங்கினா். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது குறித்து தகவலின்பேரில், லத்தேரி போலீஸாா் விரைந்து சென்றனா்.

அதற்குள் போலீஸாா் வருவது குறித்து தகவலறிந்த நிகழ்ச்சியாளா்கள் மஞ்சுவிரட்டை முடித்துக் கொண்டு மாடுகளுடன் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்தச் சம்பவத்தில் யாரும் கைது செய்யப்படவும், மாடுகளும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல், அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடத்தினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com