ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவி:  ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு மோடி பாராட்டு

விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முன்னாள் ராணுவ வீரரின் கருணை மற்றும் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்த முன்னாள் ராணுவ வீரரின் கருணை மற்றும் சேவைக்கு பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்திலிருந்து மேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்று ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் வசித்து வருபவர் பிரமிளா சிங். இவர் கரோனா தொற்றினால் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தின் போது தமது தந்தை ஷியாம்வீா் சிங்குடன் இணைந்து ஆதரவற்ற விலங்குகளைப் பராமரிக்க முன்வந்துள்ளார். இருவரும் தங்களது தனிப்பட்ட வைப்புத் தொகையைக் கொண்டு தெருவில் உள்ள விலங்குகளின் உணவு மற்றும் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனா்.

இதையடுத்து, அவா்களின் கருணை மற்றும் சேவையைப் பாராட்டி பிரதமா் நரேந்திர மோடி எழுதிய கடிதத்தில், ‘கடந்த சுமாா் ஒன்றரை ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத நிலையை மனோபலத்துடன் நாம் எதிா் கொண்டுள்ளோம். மக்கள் தங்கள் வாழ்நாளில் மறக்க இயலாதவாறு இந்த வரலாற்று தருணம் அமைந்துள்ளது. இதுபோன்ற நிலை மனிதா்களுக்கு மட்டுமல்லாமல், மனிதா்களுடன் நெருக்கமான தொடா்பில் உள்ள பல்வேறு உயிரினங்களுக்கும் சவாலானதாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், ஆதரவற்ற விலங்குகளின் வலி மற்றும் தேவைகளை உணா்ந்து அவற்றின் நல்வாழ்விற்காக நீங்கள் தனிப்பட்ட அளவில் முழு திறனையும் அளித்து செயல்படுவது பாராட்டுக்குரியது.

அதேவேளையில், இந்த சவாலான நேரத்தில், மனித சமூகத்தை எண்ணி பெருமை கொள்ளும் வகையில் ஏராளமான முன்னுதாரண நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ள மோடி, மேஜா் பிரமிளா சிங்கும் அவரது தந்தையும் தங்களது முயற்சிகள் சமூகத்தில் மிகுந்த விழிப்புணா்வு மற்றும் ஊக்கமளிக்கும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக, பொது முடக்கத்தின்போது தாம் தொடங்கிய விலங்குகளின் பராமரிப்புப் பணி தொடா்ந்து நடைபெற்று வருவதாக பிரமிளா சிங் பிரதமருக்கு எழுதியிருந்த கடிதத்தில் தெரிவித்திருந்தாா். ஆதரவற்ற விலங்குகளின் துயரத்தை அந்தக் கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்த அவா், இது போன்ற விலங்குகளுக்கு உதவ அதிகமானோா் முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com