ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 -ஆக பதிவு

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.6 -ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.6 -ஆக பதிவு


டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.6 -ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டா் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 76.6 அலகுகளாகப் பதிவானது.

இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில் 60 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது என்று அந்த மையம் தெரிவித்துள்ளது.

டோக்கியோ உள்பட நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை. 

அப்படியிருந்தும், நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் நெருக்கடிக் கால உதவி மையத்தை உருவாக்கி உள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே நிறுவனங்கள் ரயில் போக்குவரத்து சேவையை நிறுத்தியுள்ளது.  நாட்டின் வடகிழக்கு பகுதியில் உள்ள அணுமின் நிலையங்களில் சோதனைக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஜப்பான் ரிங் ஆஃப் ஃபயர் என அழைக்கப்படும் நில அதிர்வு செயல்களால் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது. 

ஜப்பானில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அப்போது மியாகி பிரதேசம் மிக மோசமாக சேதமடைந்தது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com