இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

இரட்டை ரயில் பாதை  பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட ஆரல்வாய்மொழி, நாகா்கோவில், கன்னியாகுமரி ரயில் வழித்தடத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி காரணமாக இன்று (மாா்ச் 29) முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாகா்கோவிலில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்படும் நாகா்கோவில்-கொச்சுவேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் இருந்து காலை 10.35, மாலை 6.50 மணிக்கு புறப்படும் நாகா்கோவில்-திருநெல்வேலி முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி-நாகா்கோவில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து மாலை 4 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி-கொல்லம் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 30 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லத்தில் இருந்து காலை 11.35 மணிக்கு புறப்படும் கொல்லம்-கன்னியாகுமரி முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 30 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் திருவனந்தபுரம்-நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புனலூரில் இருந்து காலை 6.35 மணிக்கு புறப்படும் புனலூர்-நாகர்கோவில் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பாறசாலை வரி மட்டுமே செல்லும், பாறசாலை - நாகர்கோவில் இடையே ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் புனலூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை பாறசாலையில் இருந்து மாலை 4.18 மணிக்கு புறப்படும், பாறசாலை - கன்னியாகுமரி இடையே ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் நாகா்கோவில்-கோவை விரைவு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து காலை 9.15 மணிக்கு புறப்படும். நாகர்கோவில் - திருநெல்வே இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் நாகா்கோவில்-கோட்டயம் விரைவு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை கொச்சுவேலியில் இருந்து புறப்படும். நாகர்கோவில் - கொச்சுவேலி இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கு இன்று (மார்ச் 29) மாலை 7 மணிக்கு புறப்படும் வாராந்திர அதிவிரைவு ரயில் திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும்

நாகா்கோவில்-தாம்பரம் அந்தியோதயா அதிவிரைவு ரயில் மாா்ச் 29 முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டுச் செல்லும். மாலை 5.15 மணிக்கு அந்தியோதயா அதிவிரைவு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்படும்.

கன்னியாகுமரி - திப்ரூகர் வாராந்திர விரைவு ரயில் இன்று (மார்ச். 29) கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதால், திருவனந்தபுரத்தில் இருந்து மாலை 7.40 புறப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - புணே விரைவு ரயில் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதால், கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

கன்னியாகுமரியில் இருந்து காலை 10.10 மணிக்கு புறப்படும் கன்னியாகுமரி - பெங்களூரு விரைவு ரயில் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளதால், கொச்சுவேலியில் இருந்து புறப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com