சுடச்சுட

  

  ஃபுட்பால் விளையாடிய பசுமாடு... வைரல் விடியோ!

  By கார்த்திகா வாசுதேவன்  |   Published on : 03rd July 2019 12:52 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  000_cow

   

  கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே இரண்டு நாட்களுக்கு முன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட விடியோ ஒன்று நெட்டிஸன்களிடையே வைரலாகப் பரவி வருகிறது. அந்த விடியோவில் ஹர்ஷா, This is the funniest thing you will see today! என்று குறிப்பிட்டு பகிர்ந்திருந்தார். நிச்சயமாக அது வேடிக்கையான விடியோவே தான். விடியோவில் பசுமாடு ஒன்று மைதானத்தில் நின்று கொண்டிருக்கிறது. அந்த மைதானம் அந்தப் பகுதி இளைஞர்கள் கால்பந்து ஆடும் மைதானம் போலிருக்கிறது. அங்கு இளைஞர்களின் விளையாட்டின் இடையே சிக்கிக் கொண்ட பசுவின் காலருகில் புட்பால் ஒன்று சிக்கிக் கொள்கிறது. பசுமாடு அதைப் பற்றி என்ன யோசித்ததோ தெரியவில்லை, பந்துக்காக தன்னை இளைஞர்கள் நெருங்கும் போதெல்லாம் அவர்களை விரட்டி விட்டு பந்தைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது. அந்த முயற்சியில் புட்பால் விளையாட்டு வீரங்கனை போல பசுவும் பந்தை எத்திக் கொண்டே மைதானத்தில் சில அடி தூரம் ஓடியது. இந்த வேடிக்கையைக் கண்டு அங்கிருந்த இளைஞர்கள் மனம் விட்டுச் சிரித்தனர். பசுமாடு போன பிறவியில் ஒரு ஃபுட்பால் வீரங்கனையாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு எனும் ரீதியில் சிலர் அந்த ட்விட்டர் பக்கத்தில் கமெண்ட் இட்டிருந்தனர். பசுமாட்டுடன் மைதானத்தில் இருந்த இளைஞர்களோ ஆச்சர்ய மிகுதியில் பசுவை விளையாடச் சொல்லி உற்சாகக் குரலெழுப்பத் தொடங்கி விட்டனர். சுமார் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த விடியோ பார்ப்பவர்களை ஆச்சர்யமான சந்தோஷத்தில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கிறது.

  தினமணி வாசகர்களும் பார்த்து மகிழுங்கள்...

   

   

  பசுமாட்டின் ஆட்டத்தைக் கண்டு ரசித்த ரசிகர்களில் சிலர்;

  பசு, அதைப் பந்தாகக் கருதவில்லை, அதை ஏதோ பழவகைகளில் ஒன்றாகக் கருதி தன்னுடைய உணவை இளைஞர்கள் தன்னிடம் இருந்து தட்டிப் பறிக்க விடாமல் செய்யவே அவர்கள் பந்தை எடுக்க வராமல் தடுக்கும் உத்தியைக் கையாள்கிறது என்றும், 

  பந்தை தனது கன்றுக்குட்டியாக நினைத்து காபந்து செய்கிறது என்று சிலரும்,

  பூர்வ ஜென்மத்தில் பசு, கால்பந்து வீரனாகப் பிறந்திருக்கலாம் என்று சிலரும் கமெண்ட் இட்டு தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்திருந்தது வேடிக்கையாக இருந்தது.

  Video courtesy: Hindustan times

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai