வாய்விட்டுச் சிரிச்சா நோய்விட்டுப் போயிடும்! வீக் எண்ட் ஜோக்ஸ்

கடன் கொடுத்தவர் திட்டியதால் அவர் வீட்டுப் பக்கம் போகாமல், அடுத்த தெரு வழியே போகிறார்
jokes
jokes

"ஒரு நடிகையை பேங்க் மேனேஜராப் போட்டது தப்பாப் போச்சு''
"ஏன் சார்?''
"விவாகரத்துக்குக் கூட லோன் கொடுக்குறாங்க''

- கே.இந்துகுமரப்பன், விழுப்புரம்.

"உங்க வீட்டுல தலைவர் யார்?''
"குடும்ப அட்டையில் நான்... 
குடும்பத்தில் என் மனைவி''

- கு.அருணாசலம், தென்காசி.

"இவர் பெரியரோஷக்காரர்''
"அப்படியா?''
"கடன் கொடுத்தவர் திட்டியதால் அவர் வீட்டுப் பக்கம் போகாமல், அடுத்த தெரு வழியே போகிறார்''

- எஸ்.சீதாராமன், மானூர்.

"தற்காப்புக் கலைகளில் ஒன்றைக் கூறு''
"ஜால்ரா அடிக்குறது சார்''

- ஏ.தென்றல், அல்லம்பட்டி.

"தலைவர் பணங்காட்டு நரி மாதிரி...''
"பனங்காட்டு நரின்னுல சொல்லுவாங்க?''
"பணத்தைக் காட்டுனா போதும். நரி மாதிரி ஏதாவது செய்வார்'' 

வி.ரேவதி, தஞ்சை.

"ஐயய்யோ பேண்ட் கிழிஞ்சு போச்சுடா''
"ஜீன்ஸ் பேண்ட்தானே... விடு பேஷன் என்று சொல்லிக்கலாம்''

- செ.ரா.ரவி, செம்பட்டி.

"எங்க ஊர்ல எந்தக் கூட்டம் நடந்தாலும் இவர்தான் முதல்ல பேசுவார்''
"ஊர்ல பெரிய மனுஷனா?''
"இல்லை சவுண்ட் சர்வீஸ் வெச்சுருக்கார். மைக் டெஸ்ட் பண்ணுவார்''

- ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com