உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஸ்கல் பிரேக்கர் என்ற சேலஞ்ச் சமூக வலைத்தளங்களில் மாணவர்களிடையே வேகமாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது ஒருவருக்கொருவர் சேலஞ்சுகள் விடப்படுவது வழக்கம். இதில் கிகி சேலஞ்ச் போன்ற ஆபத்து நிறைந்தவையும் அடங்கும்,
அந்த வரிசையில் தற்போது சமூக வலைத்தளங்களில் 'ஸ்கல் பிரேக்கர் சேலஞ்ச்' (Skull-breaker challenge) என்ற ஒரு ஆபத்தான விளையாட்டு பரவி வருவது பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. உயிரைப் பறிக்கக் கூடிய இந்த விளையாட்டை செய்து மாணவர்கள் டிக்டாக்கில் பதிவிட்டு வருகின்றனர்.
அதன்படி, மூன்று பேர் வரிசையாக நிற்க வேண்டும். ஓரத்தில் உள்ள இருவரும் முதலில் எகிறி குதிப்பர். பின்னர் நடுவில் உள்ளவர் குதிப்பார். நடுவில் உள்ளவர் குதிக்கும்போது ஓரத்தில் நிற்பவர் இருவரும் சேர்ந்து காலால் அவரை தடுத்து கீழே விழ வைக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது நடுவில் நிற்பவர் பின்னோக்கி விழுகிறார். இந்த விளையாட்டில் பல மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இந்த சவாலில் உயிரிழப்புகள் கூட ஏற்படும் என்றும் மாணவர்கள் இதனை கைவிட வேண்டும் என்றும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐந்து ஆண்டு கால திமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களுக்கும் திட்டங்கள்! - சு. முத்துசாமி பெருமிதம்

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - ஓபிஎஸ்!

ஒசூரில் மனநலம் பாதித்த அஸ்ஸாம் பெண் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மூத்த குடிமக்கள் வீட்டிற்கே சென்று வாக்கு பெறும் பணி ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


