குடும்பத்தினருடன் இருப்பவர்கள்தான் தனிமையை உணருகிறார்கள்: ஆய்வு முடிவில் தகவல்

வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தனிமையில் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
குடும்பத்தினருடன் இருப்பவர்கள்தான் தனிமையை உணருகிறார்கள்: ஆய்வு முடிவில் தகவல்

வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு காரணங்களுக்காக தனிமையில் உள்ளதாகவும், அதிலும் தனியாக வாசிக்கத்தவர்கள்தான் அதிகம் தனிமையில் இருக்கின்றனர் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தனியாக வாழ்வது வயதான காலத்தில் தனிமையின் அபாயத்தை அதிகரிக்கிறது. அதே சமயம் மிட் லைஃப் தனிமைப்படுத்தப்பட்ட உணர்வு ஆளுமைப் பண்புகளுடன் தொடர்புடையது என்று ஆய்வு கூறுகிறது.

சைக்காலஜிகல் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டது

45 வயதுக்கு மேற்பட்ட 4,000 க்கும் மேற்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட தரவைக் கொண்டு, தனிமைக்கும் ஆளுமைப் பண்புகள் மற்றும் வாழ்க்கை சூழ்நிலைகளுக்கு உள்ள தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தனிமை என்பது வளர்ந்து வரும் பொது சுகாதாரப் பிரச்னையாகும். தனிமைக்கு முந்தைய விஷயங்களை அடையாளம் காண்பது கடினம். எனினும், தனிமையில் உள்ளவர்களை வைத்து சில ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

ஆய்வில், 'உணர்ச்சி ரீதியாக நெகிழக்கூடிய நபர்கள், மன அழுத்த சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு எந்த வயதிலும் தனிமையின் ஆபத்து குறைவு. அதேபோன்று நடுத்தர வயதினர் தனிமையை உணருவது குறைவு. 

இதில் இளம் வயதினர், நடுத்தர வயதினர் என இரு குழுக்களிடமும் தனிமையின் அறிகுறிகள் இருந்தன. ஆனால், வெவ்வேறு காரணங்களுக்காக அவர்கள் தனிமையை உணர்ந்தார்கள்.

மன அழுத்த சூழ்நிலையில் இருப்பவர்கள் தனிமையை மிகத்திறம்பட கையாளுகின்றனர். உணர்ச்சி சமநிலையை பராமரிக்கும் வலுவான திறன் கொண்டவர்கள்.

தனியாக வசிக்காதவர்களை விட குடும்பத்தினருடன் வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் தனிமையை உணர நான்கு மடங்கு அதிகம்' என்று கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com