பெண்கள் தங்களை கவர்ச்சிகரமாக உணர்வது எப்போது?

மூன்றாம் நபர் ஒருவர் பார்க்கும்போது மக்கள் தங்கள் உடல்களை மிகவும் கவர்ச்சிகரமாக உணர்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களை கவர்ச்சிகரமாக உணர்வது எப்போது?

மூன்றாம் நபர் ஒருவர் பார்க்கும்போது பெண்கள் தங்கள் உடல்களை மிகவும் கவர்ச்சிகரமாக உணர்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பார்சிலோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மனிதன் தன்னை/ தன் உடலை கவர்ச்சிகரமாக எப்போது உணர்கிறான், தனது உடல் அமைப்பு குறித்து என்ன நினைக்கிறான் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில், பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 25க்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாக கலந்துகொண்டனர். 

ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம் அவர்களது உடல் அமைப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. மேலும், மூன்று உடல் அமைப்புகளை வரையுமாறு கூறியதுடன் பின்னர் அவர்கள் வரைந்த உடல் அமைப்பை மதிப்பிடுமாறு கூறப்பட்டது. அவர்கள் வரைந்த உடல் அமைப்புகளை அவர்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், தங்கள் உடல் அமைப்பு எவ்வாறு மாற வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கேட்கப்பட்டது. 

இறுதியாக, ஒவ்வொருவரும் தங்கள் உடலை எப்படி பார்க்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் உடலைப் பார்க்கும்போது எவ்வாறு உணருகிறார்கள் என இரண்டு  விதங்களில் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இறுதியில், இந்த வித்தியாசமான ஆய்வில், ஒவ்வொருவருமே தங்கள் உடலை கவர்ச்சிகரமானதாகவே உணர்கிறார்கள் என்றும் அதிலும் குறிப்பாக, மூன்றாம் நபர் தங்களைப் பார்க்கும்போது அவர்கள் தங்களை மிகவும் கவர்ச்சிகரமாக உணர்கிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆண்களை விட பெண்களே தங்களை அதிக கவர்ச்சியாக உணர்கிறார்கள் என்று ஆய்வு இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com