ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் 'ஸ்மார்ட் டயப்பர்' கேள்விப்பட்டிருக்கீங்களா?

'ஸ்மார்ட் டயப்பர்' தாய்மார்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 
ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் 'ஸ்மார்ட் டயப்பர்' கேள்விப்பட்டிருக்கீங்களா?

ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் வாட்ச் வரிசையில் தற்போது ஸ்மார்ட் டயப்பர்' வந்துவிட்டது. குழந்தை வளர்ப்பில் தாய்மார்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருப்பது குழந்தையின் டயப்பரை சரியான நேரத்தில் மாற்றுவதுதான். அந்த வகையில் 'ஸ்மார்ட் டயப்பர்' தாய்மார்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். 

அதன்படி, ஸ்மார்ட் டயப்பர், குழந்தையின் டயப்பரை சரியான நேரத்தில் மாற்றுவது குறித்த தகவலை பெற்றோருக்கு தெரிவித்துவிடும். அதன்படி, இந்த ஸ்மார்ட் டயப்பர் சென்சார் வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது. டயப்பர் ஈரப்பதம் அடைந்தால் உடனடியாக ஒரு சிக்னலை ரிசீவருக்கு கொடுக்கும். இந்த ரிசீவர் ஸ்மார்ட் போன் அல்லது கணினிக்கு தகவலை அனுப்பும்.  

இதன் மூலமாக ஈரப்பத்தினால் குழந்தைகளுக்கு சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் இருக்க உதவும்.  ஐஇஇஇ சென்சார்கள்(IEEE Sensors) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

டயப்பர்கள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, வயதான மக்களுக்கும் அல்லது படுக்கையில் இருக்கும், தங்களை கவனித்துக் கொள்ள முடியாத நோயாளிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. எனவே வயதானவர்களுக்கும் ஸ்மார்ட் டயப்பர் விரைவில் உருவாக்கப்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

டயப்பரில் உள்ள சென்சார் ஒரு செயலற்ற ரேடியோ அதிர்வெண் அடையாள(RFID) குறிச்சொல்லைக் கொண்டுள்ளது.  இது டயப்பரின் பாலிமருக்கு கீழே வைக்கப்படுகிறது. பாலிமர் என்பது ஈரப்பதத்தை ஊறவைக்க டயப்பர்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் ஒரு வகை ஹைட்ரோஜெல் ஆகும்.

ஈரப்பதம் மட்டுமின்றி, டயப்பர் அசுத்தமாக இருந்தாலோ, டயப்பர் குழந்தைக்கு அசவுகரியமாக இருந்தாலோ பெற்றோருக்கு மொபைல் ஆப் மூலமாக தகவல் சென்று விடும். 

குழந்தை வளர்ப்பில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் நிலையில், இந்த ஸ்மார்ட் டயப்பர் தாய்மார்களுக்கும், ஒரே நேரத்தில் பல குழந்தைகளை பராமரிக்க செவிலியர்களுக்கும் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com