திரிபுராவில் பிரம்மாண்ட பாரம்பரிய உணவுத் திருவிழா!

திரிபுரா மாநிலத்தில் அரிசி இனிப்பு உணவு வகைகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரம்மாண்ட உணவுத் திருவிழா நடைபெற்றது. 
திரிபுராவில் பிரம்மாண்ட பாரம்பரிய உணவுத் திருவிழா!

திரிபுரா மாநிலத்தில் அரிசி இனிப்பு உணவு வகைகளை ஊக்குவிக்கும் பொருட்டு பிரம்மாண்ட உணவுத் திருவிழா நடைபெற்றது. 

'பிதா புலி உத்சவ்'(Pitha Puli Utsav) என்ற பெயரில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை சித்ரார்பிதா ஆர்ட் அண்ட் கிராஃப்ட் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்தது.

இந்த 'ரைஸ் ஃபெஸ்ட்' நிகழ்ச்சியில் திரிபுராவில் உள்ள பாரம்பரிய உணவு முறைகள் இடம்பெற்றது. தலைநகர் அகர்தலாவில் உள்ள நந்த நகரில் நூற்றுக்கணக்கான உணவு ஆர்வலர்கள் ஒன்றிணைந்து பாரம்பரியமான பெங்காலி அரிசி இனிப்பு உணவு வகைகளை செய்து பரிமாறினர். 

'பிதாஸ்' மற்றும் 'புலிஸ்' போன்ற பெங்காலி அரிசி கேக்குகள் தலைமுறை தலைமுறையாக அப்பகுதி மக்கள் விரும்பி உண்ணும் உணவாகும். இவ்விழாவில் இல்லத்தரசிகள் பலரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. 

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரான சாண்டா டெப் என்பவர் கூறுகையில், 'கிராமப்புற பெண்களே இந்த சுவையான உணவு வகைகள் அனைத்தையும் தயார் செய்தனர். பாரம்பரிய உணவு வகைகளை மக்கள் மறந்துவிடக்கூடாது என்பதற்காக கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த உணவுத் திருவிழா நடைபெற்று வருகிறது' என்று தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இல்லத்தரசிகள் பலரும் கலந்துகொள்ள வேண்டும் என்பதே. எங்களது நோக்கமும் நிறைவேறி வருகிறது. இவ்விழாவில் 30க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெற்றிருந்தன.

பங்கேற்பாளரான பிராட்டதி தாஸ் பேசுகையில், 'எனது குழந்தை பருவத்தில் இருந்தே, என் பாட்டி, அம்மா அரிசி கேக்கை தயாரிப்பதை நான் பார்த்திருக்கிறேன். எனவே நானும் இந்த திருவிழாவில் கலந்துகொண்டேன். ஒவ்வொரு ஆண்டும் நான் இங்கு நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது' என்று தெரிவித்தார். 

பல்வேறு வகையான இனிப்புகள், புட்டுகள் ஆகியவை பெரும்பாலும் வேகவைக்கப்படாத அரிசி, தேங்காய், வாழைப்பழம் மற்றும் பனை இனிப்பு வகைகளால் தயாரிக்கப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com