'பெற்றோர்கள் படித்தால் குழந்தைகளுக்கு நல்லது'

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் படிப்பது/வசிப்பது எதிர்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பெற்றோர்கள் படித்தால் குழந்தைகளுக்கு நல்லது'


குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் படிப்பது/வாசிப்பது எதிர்காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சிக்கு பல வழிகளில் பலனளிக்கும் என்று சமீபத்திய ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் அறிவுப்பூர்வமான வளர்ச்சிக்கு பல வழிகளில் பெற்றோர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அந்த வகையில், பெற்றோர்கள் படிப்பது அவர்களுக்கு மட்டுமின்றி குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் நல்லது என்று 3,000க்கும் மேற்பட்ட குடும்பங்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிறு வயதில் குழந்தைகளுடன் பெற்றோர்கள் அதிக நேரம் செலவழிப்பது குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் என்ற பொதுவான கருத்து உள்ளது. அதில் ஒரு பகுதியாக குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் வாய்விட்டு படிக்க வேண்டும். அப்போது குழந்தைகள் தானாகவே அருகில் வந்து கவனிப்பர். குழந்தையை படிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதை விட இவ்வாறு செய்தால் குழந்தைகளுக்கு படிப்பின் மீதான கவனம் தானாகவே வரும்.

எடுத்துக்காட்டாக இரவு படுக்கும்போது பேசிக்கொண்டிருக்கும் நேரத்தின் இடையே ஒரு சிறு கதையை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வாசித்துக் காட்டலாம். குழந்தைகளின் சிறுவயதில் இவ்வாறு செய்யும்போது, எதிர்காலத்தில் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.


குழந்தைகளுக்கு வாசித்து காட்டும்போது பெற்றோர்களுக்கு குழந்தைகளுடனான உறவின் தரத்தை மேம்படுத்துகிறது. பெற்றோர்களுக்கும் அவர்களது செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், பெற்றோரின் மன அழுத்தத்தையும் இது குறைக்கக்கூடும்.

குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்களின் கற்றல் திறன் தொடர்ந்து மேம்படும். குழந்தைகளுக்கு எளிதாக சொற்கள் பழக்கப்படும். கருத்துகளை எளிதாக உள்வாங்குவர். எதிர்காலத்தில் வாழ்வியல் ரீதியாகவும் பல்வேறு பலன்களை அளிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com