விமானத்தில் உள்ளோரை முகம் சுளிக்க வைத்த இளைஞர்!

வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது ஈரமான ஷூவை உலர வைப்பதற்காக விமானத்தில் இருக்கைக்கு மேலுள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட்டை பயன்படுத்தியுள்ளார்.
விமானத்தில் உள்ளோரை முகம் சுளிக்க வைத்த இளைஞர்!

வாஷிங்டனில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்றில் பயணித்த இளைஞர் ஒருவர் தனது ஈரமான ஷூவை உலர வைப்பதற்காக விமானத்தில் இருக்கைக்கு மேலுள்ள ஏர் கண்டிஷனிங் வென்ட்டை பயன்படுத்தியுள்ளார். இளைஞரின் இந்த செயல் அங்கிருப்போரை முகம் சுளிக்க வைத்துள்ளது. மேலும், இதனை மற்றொரு பயணி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 3 லட்சம் பார்வையாளர்களை கடந்து பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் பலரும் அந்த இளைஞரை வறுத்தெடுத்து வருகின்றனர். பொது இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், சில பயணிகளும் விமானத்தில் இவ்வாறு நடந்துகொள்வதாக பயணிகள் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வேறு எங்கேனும் இவ்வாறு நடக்கும் பட்சத்தில் மற்ற பயணிகள் கேள்வி எழுப்ப வேண்டும் என்றும் விமானத்தில் ஒரு 'தாக்குதல்' நடத்த வேண்டும் என்றும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.

விமானத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் பயணிக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட சுகாதார விழிப்புணர்வு அவசியமாகிறது. இம்மாதிரியான செயல்கள் அருகில் இருப்போரிடையே நோய்த்தொற்றை ஏற்படுத்தும். எனவே, பொது இடங்களில் இவற்றை உணர்ந்து சுகாதார விழிப்புணர்வுடன் மற்றவர்களுக்கு இடையூறு இன்றி நடந்துகொள்வது அவசியம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com