டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுபவரா நீங்கள்..?

உணவு உண்ணும் நேரங்களில் டிவி பார்ப்பது, ஆன்லைன் கேம் விளையாடுவது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
டிவி பார்த்துக்கொண்டே சாப்பிடுபவரா நீங்கள்..?

உணவு உண்ணும் நேரங்களில் டிவி பார்ப்பது, ஆன்லைன் கேம் விளையாடுவது உண்ணும் உணவின் அளவைக் குறைக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, பங்கேற்பாளர்கள் இரண்டு வகைப்படுத்தப்பட்டனர். ஒரு பகுதியினர் எந்தவித கவனச் சிதைவுமின்றி உணவு அருந்தினர். மற்றொரு பகுதியினர் ஆன்லைன் கேம் விளையாடுவதில் ஈடுபட்டுக்கொண்டே உணவருந்தினர். 

விளையாடிக்கொண்டே உணவருந்துபவர்களுக்கு அல்சைமர் நோய் மற்றும் கவனக்குறைவு போன்ற பிரச்னைகளுக்கு ஆளாவதாக தெரிய வந்துள்ளது. 

இதன்படி, ஆய்வில் பங்கேற்ற ஒவ்வொருவருக்கும் விருப்பமான உணவுகள் கொடுக்கப்பட்டது. முதல் 15 நிமிடங்கள் அவர்கள் வழக்கம்போல சாப்பிடுகின்றனர். அதன்பின்னர், விடியோ பார்க்கும் ஆர்வத்திலோ, விளையாட்டில் கவனம் செலுத்துவதன் காரணத்தினாலோ உணவில் கவனம் குறைகிறது. அதன்பின்னர் அவர்கள் அதிக உணவை எடுத்துக்கொள்வதில்லை. 

இவ்வாறு ஒவ்வொரு நபருக்கும் உணவு வழங்கப்படுவதற்கு முன்னும் பின்னும் உடல் எடையும் கணக்கிடப்பட்டது. மேலும் பங்கேற்பாளர்களிடம் இதுகுறித்த பல்வேறு கேள்விகளும் கேட்கப்பட்டு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. அதாவது அவர்கள் உணவை எந்த அளவுக்கு ரசித்து உண்டனர், அவர்களது பசி உணர்வு உள்ளிட்டவை குறித்து கேட்கப்பட்டது. 

இறுதியாக, ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டுக்கொண்டே சாப்பிடுபவர்கள் குறைவாகவே சாப்பிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விளையாட்டால் கவனம் திசைதிருப்பப் படுவதே காரணம் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.  

மேலும், அவ்வாறு உணவு குறைவாக எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதில் குறைபாடு ஏற்படலாம் என்று எச்சரிக்கின்றனர் ஆய்வாளர்கள். 

எனவே, முடிந்தவரையில் உணவு உண்ணும்போது டிவி பார்ப்பதையோ, கணினி அல்லது மொபைல் போனில் கேம் விளையாடுவதையோ தவிருங்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com