விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: ஆய்வு முடிவில் தகவல்

உண்ணாவிரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 
விரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது: ஆய்வு முடிவில் தகவல்

உண்ணாவிரதம் இருப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

விரதம் இருப்பது குளுக்கோஸ் அளவை உடலில் மேம்படுத்துவதோடு நீரிழிவு நோயையும் கட்டுப்படுத்துகிறது என சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

எலிகளை வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், உண்ணாவிரதம் இருப்பது கல்லீரலில் உள்ள புரதங்களில் எம்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்துகிறது?  கொழுப்பு அமில வளர்சிதை மாற்றம், உடலியல் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

இதில், நோய்க்கு சிகிச்சை அளிக்கவும், கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உண்ணாவிரதம் சிறந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஆனால் பல்வேறு வகையான அத்தியாவசிய வளர்சிதை மாற்ற செயல்பாடுகளைச் செய்யும் கல்லீரல் புரதங்களின் உற்பத்தியில் எதிர்மறையான தாக்கம் ஏதேனும் ஏற்படுகிறதா என்பது குறித்து மேலும் ஆய்வு இருப்பதாக ஆய்வாளர்கள்  கூறுகின்றனர்.

எனினும், விரதம் இருப்பது ஒட்டுமொத்தமாக உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றும் குறிப்பாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சாப்பிடுவது மிகவும் நல்லது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஆய்வு முடிவுகள் செல் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com