'கண்ணாடி அணிவது கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கலாம்'

கண்ணாடி அணிவது கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

கண்ணாடி அணிவது கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

சீனாவின் சுய்ஜோ ஜெங்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 276 கரோனா நோயாளிகளைக் கொண்டு சீனாவின் நாஞ்சாங் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் ஜமா கண் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

இதன்படி, நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரத்திற்கும் மேலாக கண்ணாடிகளை அணிவது கரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க உதவும் என்றும் கண்களைத் தொடும் வைரஸின் அதிர்வெண்ணைக் குறைக்கும் ஒரு தடையாக கண்ணாடிகள் செயல்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

ஆய்வில் பங்கேற்றவர்களில் மயோபியா(கிட்டப்பார்வை) குறைபாடு உள்ளவர்கள் 16 பேரிடம் வைரஸ் தொற்றின் தீவிரம் குறைவாகவே இருந்தது. முந்தைய ஆய்வின் அடிப்படையில் ஹூபே மாகாணத்தில் மயோபியா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் 5 சதவிகிதம் என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மயோபியா பாதிப்பு உள்ளவர்களின் தரவுகள் முழுவதுமாக கிடைக்காததால் முடிவுகளை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் தேவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மராகாக்கிஸ் கூறுகையில், அறியப்படாத மற்றும் அளவிடப்படாத காரணிகளை வைத்து முடிவுகள் மாறலாம் என்று கூறியுள்ளார். 

முகக்கவசம் அணிவதோடு மட்டுமின்றி கண்களையும் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்பதால் கண்ணாடிகள் வைரஸ் பரவலுக்கு எதிரான ஒரு தடை காரணியாக இருக்கலாம், மேலும், நமது கைகள் கண்களை அடிக்கடி தொடுவதன் மூலமும்  வைரஸ் தொற்று ஏற்படலாம். கண்ணாடி அணிந்திருக்கும் பட்சத்தில் இதுபோன்ற பாதிப்புகள் தவிர்க்கப்படலாம் என்றும் ஆய்வு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com