'அதிக ஆபத்தில் உள்ள கரோனா நோயாளிகளை கண்டறிய உதவும் இரத்தப் பரிசோதனை'

அதிக ஆபத்தில் உள்ள கரோனா கரோனா நோயாளிகளை கண்டறிய ரத்த பரிசோதனை  உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
இரத்தப் பரிசோதனை (கோப்புப்படம்)
இரத்தப் பரிசோதனை (கோப்புப்படம்)

அதிக ஆபத்தில் உள்ள கரோனா நோயாளிகளைக் கண்டறிய இரத்த பரிசோதனை  உதவும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

இரத்த அணுக்களின் எண்ணிக்கையிலும் வகைகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும்போது இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதை முன்கூட்டியே கண்டறியலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

பாஸ்டன் பகுதியில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கொண்டு மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள், ஜமா நெட்வொர்க் ஓப்பன் என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளன. 

ஆய்வில் பங்கேற்ற 1,641 நோயாளிகளின் உடலை பரிசோதனை செய்வதற்கு முன்னதாக, அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்யப்பட்டது.  இதில், இரத்த சிவப்பணுக்களின் அளவு இறப்புடன் தொடர்புடையதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். 

அதிக ஆபத்தில் உள்ள கரோனா நோயாளிகளை விரைவாகவும், எளிதாகவும் அடையாளம் காணும் வழிகளைக் கண்டறிய ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதன்படி, இரத்த அணுக்களை மதிப்பிடும் ஒரு நிலையான பரிசோதனை மூலமாக நோயாளிகள் எந்த அளவுக்கு ஆபத்தில் இருக்கின்றனர் என்பதை அடையாளம் காணலாம் என அமெரிக்க மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜான் எம் ஹிக்கின்ஸ் கூறினார்.

மேலும், நோயாளியின் வயது, ஏற்கெனவே அவர்கள் எதிர்கொண்ட நோய்கள், தற்போது அவர்களுக்கு இருக்கும் உடலியல் பிரச்னைகள் - இவற்றோடு இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை மற்றும் தன்மையை ஒப்பிடுகையில், தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பிட்ட அளவைவிட இரத்த சிவப்பணுக்களின் அகலம் மாறுபடும்போது அதற்கான விளைவுகள் ஏற்படுகின்றன. ஆர்.டி.டபிள்யூ சாதாரண அளவு கொண்டவர்களின் இறப்பு விகிதம் 11 சதவிகிதமாகவும், ஆர்.டி.டபிள்யூ அதிகம் கொண்டவர்களின் இறப்பு விகிதம் 31 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. குறிப்பிட்ட அளவை விட அதிக ஆர்.டி.டபிள்யூ கொண்டிருந்த நோயாளிகள் 2.7 மடங்கு அதிகமாக இறப்பதற்கு வாய்ப்பு இருந்தது. 

ஆர்.டி.டபிள்யூ எனும் இரத்த சிவப்பணுக்களின் அகலம் என்பது நமது உடலில் உள்ள பெரிய மற்றும் சிறிய சிவப்பணு செல்களின் வித்தியாசம் ஆகும். இது ஆண்களுக்கு 11.8-14.5 என்ற அளவிலும், பெண்களுக்கு 12.2-16.1 என்ற அளவிலும் இருக்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com