எடை இழப்புக்கான சிறந்த உணவு சேர்க்கை எவை?

எடை இழப்புக்கான சிறந்த உணவு சேர்க்கை எவை என்று பார்ப்போம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

எடை இழப்புக்கான சிறந்த உணவு சேர்க்கை எவை என்று பார்ப்போம்.

1. மிளகு சேர்த்த உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு பொதுவாக கொழுப்பை அதிகரிப்பதற்காக கூறப்படுகிறது. ஆனால் சில ஆய்வுகள் உருளைக்கிழங்கு எடை இழப்புக்கு உதவும் என்று கூறுகின்றன. உருளைக்கிழங்கில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. மிளகுடன் உருளைக்கிழங்கை சேர்த்தால் எடை நன்றாக குறையும். கருப்பு மிளகில் உள்ள பைபரின் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்கிறது.

2. இலவங்கப்பட்டையுடன் காபி

இலவங்கப்பட்டை சேர்த்து காபி  குடிப்பது விரைவான எடை இழப்புக்கு உதவுகிறது. காபியில் உள்ள காஃபின் பசியை அடக்குவதாக அறியப்படுகிறது. மேலும் உடலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சில சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களை இலவங்கப்பட்டை  வழங்குகிறது. இந்த இரண்டு பொருள்களின் கலவையானது எடை இழப்புக்கு மிகவும் உதவி செய்கிறது.

3. பட்டாணியுடன் அரிசி

அரிசியில் லைசின் அமினோ அமிலம் குறைவாக உள்ளது, அதனால்தான் இது முழுமையற்ற புரதமாக கருதப்படுகிறது. பட்டாணி போன்ற லைசின் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அதன் புரத அளவை அதிகரிக்கிறது. எடையை குறைக்க விரும்புவோர் வெள்ளை அரிசிக்குப் பதிலாக பழுப்பு அரிசியைப் பயன்படுத்தலாம்.

4. ஆரோக்கியமான கொழுப்புகளுடன் பழங்கள் மற்றும் காய்கறிகள்

பழங்கள் மற்றும் காய்கறிகள் உடன் ஆரோக்கியமான கொழுப்புகளான ஆலிவ் எண்ணெய், நெய், பருப்புகள் மற்றும் விதைகளை சேர்ப்பது உடல் எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

எடை இழப்புக்கான சேர்க்கை உணவுகளை மருத்துவரின் ஆலோசனையை மேற்கொண்டு உண்பது நல்லதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com