செப் 23 - 25 ல்  சென்னை மியூசியம் தியேட்டரில் 'சூடாமணி' தியேட்டர் நாடகம்! 

அட்ரஸ்: மியூசியம் தியேட்டர், பாந்தியன் ரோடு, செயின்ட் அந்தோணி ஸ்கூல் அருகில், எக்மோர், சென்னை.
செப் 23 - 25 ல்  சென்னை மியூசியம் தியேட்டரில் 'சூடாமணி' தியேட்டர் நாடகம்! 

இயக்கம்: பி.சி.ராமகிருஷ்ணா  
மூலக் கதை நாடக வடிவில் மாற்றம்: நிகிலா கேசவன் 
ஆங்கில மொழியாக்கம்: பிரபா ஸ்ரீதேவன் 

அட்ரஸ்: மியூசியம் தியேட்டர், பாந்தியன் ரோடு, செயின்ட் அந்தோணி ஸ்கூல் அருகில், எக்மோர், சென்னை 

நேரம்: செப் 23 லிருந்து 25 வரை மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரை 

சூடாமணி தமிழ் இலக்கிய உலகில் மறக்க முடியாத ஆளுமைகளில் ஒருவர். அவர் தனது வாழ்நாளில் சுமார் 400 லிருந்து 500 சிறுகதைகள் வரை எழுதி இருக்கிறார். எல்லாக் கதைகளுமே வாழ்வின் மிக நுட்பமான விஷயங்களை பின்னிப்  படர்ந்து செல்லக்கூடியவை என்பதால் இவரது கதைகள் பலருக்கு ஆதர்சம். அப்படியான சிறுகதைகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து ’மெட்றாஸ் பிளேயர்ஸ்’ நாடக குழுவினர் அவற்றை  ’சூடாமணி’ என்ற பெயரில் தியேட்டர் நாடகமாக்கி இருக்கிறார்கள். சிறுகதைகள் நாடகமாகவும், குறும்படங்களாகவும் ஆக்கம் பெறுகையில் மூலக்கதை சிதையாமல் உருமாற்றம் செய்வதென்பது திறமைசாலிகளாலும் ரசனை மிக்கவர்களாலும் மட்டுமே ஆகக் கூடிய செயல். மெட்ராஸ் பிளேயர்ஸ் குழுவின் ரசனையைப்  பற்றி  ஆங்கில  நாடகப் பிரியர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 

டோனர் பாஸ்: ரூ 500, 300 மற்றும் 200 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com