சுடச்சுட

  

  வெங்காயம் நறுக்கும் போது கண்களில் கண்ணீர் வராமல் இருக்க என்ன செய்யலாம்?

  Published on : 29th May 2018 05:40 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Onion-Paste

  நீண்ட நேரப்​ப​ய​ணத்​திற்​குப் பின் களைப்பு ஏற்​பட்​டால், அந்​தக் களைப்​பைப் போக்க, உப்பு பெரு​ம​ளவு உத​வு​கி​றது. ஒரு பெரிய பேசி​னில் வெது​வெ​துப்​பான நீர் எடுத்து, அதில் சிறி​த​ளவு உப்பு கலந்து, ஒரு பதி​னைந்து நிமி​டங்​கள் கால்​கள் நனை​யும்​படி உட்கார்ந்​தால், கால்​வலி, களைப்பு எல்​லாம் பறந்​து ​போ​கும்.

  வெ​து​வெ​துப்​பான நீரில் சிறிது ஆலிவ் ஆயில் கலந்து, குழந்​தை​க​ளைக் குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​க​ளின் தோலின் மென்​மையை ஆலிவ் ஆயில் பராமரிக்கும்.

  தி​ராட்​சைப்​ப​ழம் கிட்னிக்​குப் பாது​காப்பு அளிக்​கும் பழம், மல​மி​ளக்​கி​யா​க​வும் பயன்​ப​டும். இதை, பழ​மா​கவோ, பழ​ர​ச​மா​கவோ உண்​டால், நேரடி பலன் கிடைக்கும்.

  இ​ரவு மீந்​து​போன சாதத்தை ஹாட்பேக்​கில் வைத்​தி​ருந்து, காலை​யில் சைனீஸ் ஃப்ரைட் ரைஸ் செய்​ய​லாம் அல்​லது. சிறிது நீர்​விட்டு மசித்து, ஸாலட் அல்​லது உரு​ளைக்​கி​ழங்கு மசி​ய​லோடு கலக்​க​லாம்.

  கு​ழந்​தை​யைக் குளிப்​பாட்​டும்​போது, தண்​ணீ​ரில் சிறி​த​ளவு டெட்டா​லை​யும், சிறி​த​ளவு உப்​பை​யும் கலந்து குளிப்​பாட்​டி​னால் குழந்​தை​யின் மென்​மை​யான தோல் மேலும் மென்​மை​யாக ஆவ​து​டன், எந்​த​வித தோல் வியா​தி​க​ளும் வராது. தண்ணீரை விளா​வி​ய​பின்பு தான் டெட்டா​லை​யும், உப்​பை​யும் சேர்க்க வேண்டும்.

  தர்​பூ​ச​ணித் தோல், பரங்​கிக்​காய் தோல், பீர்க்​கங்​காய்த் தோல், வெந்த உரு​ளைக்​கி​ழங்கு அல்​லது பச்சை உரு​ளைக்​கி​ழங்கு தோல், சுரைக்​காய் தோல் போன்​ற​வற்​றி​லி​ருந்து, வங்​கா​ளி​கள் வித​வி​த​மான துவை​யல்​கள் செய்​கின்​ற​னர்.

  தி​னந்​தோ​றும் காலை​யில் வெறும் வயிற்​றில், வெது​வெ​துப்​பான நீரில் ஒரு மூடி எலு​மிச்​சை​யைப் பிழிந்து அருந்​தி​னால், நாள் முழு​வ​தும் புத்துணர்ச்சியோடு இருக்​க​லாம்.

  க​ரு​வுற்ற தாய்​மார்​கள் ஆறாம் மாதத்​திற்​குப் பின், அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து, அதில் இரண்டு தேக்​க​ரண்டி பார்லி அரி​சியை மிக்​ஸி​யில் போட்டு பொடி செய்து, கொதிக்​கும் நீரில் போட்டு, கொதிக்​க​வைத்து எடுத்து, ஆறி​ய​பின் ஒரு தேக்​க​ரண்டி எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் சேர்த்து காலை, மாலை அருந்தி வர, நீர் சுருக்கு நீங்கி, கால் வீக்​கம் வடி​யும். மேற்​படி பார்லி நீரை காலை​யி​லேயே தயார் செய்து வைத்​துக் கொண்டு, தேவை​யா​ன​போது, சூடு செய்து, எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலக்​க​லாம். எலு​மிச்​சைச் சாறும், உப்​பும் கலந்து வைத்​து​விட்​டோ​மா​னால், வெகு சீக்​கி​ரம் புளிப்பு ஏறி, அசி​டிடி உருவாகும்.

  தக்​காளி சூப் தயா​ரிக்​கும்​போது, சிறிது கச​க​சாவை நெய்​யில் வறுத்து, பொடித்​துப்​போட்​டால், சூப் மண​மா​க​வும், மிகுந்த சுவை​யு​ட​னும் இருக்​கும்.

  எள், கச​கசா இரண்​டும் ஒவ்​வொரு தேக்​க​ரண்டி, அரை தேக்​க​ரண்டி ஓமம், கால் தேக்​க​ரண்டி மிளகு ஆகி​ய​வற்றை சிறிது நெய் அல்​லது எண்​ணெய்​யில் மணம் வரும்​வரை வறுத்து, உப்பு சேர்த்து, கர​க​ரப்​பாக பொடித்து, சூடான சாதத்​தில் போட்டு பிசைந்து சாப்​பிட்​டால், புது​வி​த​மான சுவை​யும், மண​மும் கிடைக்​கும். வயிற்​றுப்​புண் ஆறும். கபம் நீங்​கும். வெயி​லில் அலைந்த களைப்​பும் நீங்​கும்.

  தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய
  தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

  கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்

  வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

  வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

  தலைப்புக்கு வரலாமா? வெங்காயம் நறுக்கும் போது சூயிங்கம் சாப்பிட்டால் கண்ணீர் வராது.

  - சர​சு​வதி பஞ்​சு​

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai