ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!

வீட்டில்  எறும்புத்  தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவிவிட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
ஈ, எறும்புக்குக் கூட கெடுதல் நினைக்காதவர்களாக இருந்தால், இது உங்களுக்கானது இல்லை!
  • வீட்டில் எறும்புத் தொல்லை அதிகமிருந்தால் தூள் பெருங்காயத்தை தூவி விட்டால்  எறும்புத் தொல்லை  இருக்காது.
  • ஒரு டம்ளர்  நீரில் 2 தேக்கரண்டி  தூள் உப்பை கலந்து அதை  அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால்  எறும்புத் தொல்லை குறையும்.
  • வெயில் காலங்களில் ஈக்களின் தொல்லை அதிகம் இருக்கும்.  அதனைப் போக்க, வீட்டைத்  துடைக்கும்  நீரில் சிறிது  உப்பைச் சேர்த்து பின்பு துடைத்தால் அந்த அறையில் ஈக்கள்  வராது.
  • காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை அலமாரியில் போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
  • தேனீ கொட்டி விட்டால்,  உடனே ஒரு பெரிய வெங்காயத்தை  நறுக்கி  கடி வாயில் வைத்தால், அது விஷத்தை உறிஞ்சிவிடும்.
  • பிரஷர் குக்கரை உபயோகப்படுத்தாத நேரங்களில்  மூடி வைக்கக் கூடாது.
  • இஞ்சியை ஈரத் துணியில் சுற்றித் தண்ணீர்க்  குடத்தின் மீது  வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே  இருக்கும்.
  • வெண்ணெய்யில் லேசாக  உப்பைத் தூவி வைத்து விட்டால் பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.
  • பீங்கான் பாத்திரங்களை உப்பு  கலந்த தண்ணீரில் கழுவினால் அவை பளபளவென்று பிரகாசிக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com