விக்கிரவாண்டி, நான்குனேரி இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் உடனுக்குடன்!

தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. 
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு

சென்னை: தமிழகத்தில் விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.  

செய்திகள் உடனுக்குடன்.. இணைந்திருங்கள்.
 

இடைத்தேர்தல்: விக்கிரவாண்டியில் அதிமுகவின் வெற்றி உறுதியானது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி உறுதியாகிவிட்டது.
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டியில் 18வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1,03,653 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கடைசி மற்றும் 20வது சுற்றுகள் மட்டுமே எண்ணப்பட வேண்டியது உள்ளது. அதாவது இன்னும் 30 வாக்குகள் மட்டுமே எண்ணப்பட வேண்டிய நிலையில் சுமார் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில்  முத்தமிழ்ச்செல்வன் முன்னிலையில் உள்ளார்
திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 40,463 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனின் வெற்ற உறுதியாகிவிட்டது.
இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாஜகவின் பங்களிப்பு மிக முக்கியமாக அமைந்துள்ளது. தமிழக மக்கள் பாஜகவை எதிர்பார்க்க தொடங்கிவிட்டார்கள் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி முகம் காணப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்துள்ளார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

நான்குனேரியில் 9வது சுற்றில் திடீர் மாற்றம்

நான்குனேரியில் இதுவரை நடைபெற்று முடிந்த 8 சுற்று முடிவுகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வந்த நிலையில், 9வது சுற்றில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 4,597 வாக்குகள் பெற்ற நிலையில் அதிமுக வேட்பாளர் நாராயண் 3,161 வாக்குகள் பெற்றுள்ளார்.

இடைத்தேர்தலில் வெற்றிகொடி நாட்டவிருக்கும் அதிமுக வேட்பாளர்கள்!

தமிழகத்தில் நான்குனேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களே தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.
நான்குனேரியில் 8வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயண் 39,507 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 
8வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 24595 வாக்குகள் பெற்ற பின்னடைவை சந்தித்துள்ளார். 
இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 14,912 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 15வது சுற்று முடிவில் 35,644 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் 15வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 88,091வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். திமுக வேட்பாளர் புகழேந்தி 52,447 வாக்குகள் பெற்றுள்ளார்.

ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார் உற்சாகப் பேச்சு

சென்னை: இடைத்தேர்தல் முடிவுகள் மூலம் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இரண்டு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனார்.
இந்த நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டாலினின் குற்றச்சாட்டுகள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. இந்த இடைத்தேர்தல் வெற்றி மூலமாக அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது.
இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இந்த இடைத்தேர்தல் வெற்றியைப் பார்க்கும் போது 2021ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவே வெற்றி பெறும் என்று நன்றாகவே தெரிகிறது. இடைத்தேர்தல் வெற்றியுடன் உள்ளாட்சித் தேர்தலை சந்திப்போம் என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

நான்குநேரி தேர்தல் நிலவரம்.. உடனுக்குடன்..

 நான்குனேரியில் 7வது சுற்றில் அதிமுக வேட்பாளர்  நாராயணன் 32,919 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 

7வது சுற்றில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 21,623 வாக்குகள் பெற்ற பின்னடைவை சந்தித்துள்ளார். 
இதன் மூலம் அதிமுக வேட்பாளர் 11,296 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

 விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 13வது சுற்று முடிவில்  29,658 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.

விக்ரவாண்டியில் அதிமுக வேட்பாளர் வெற்றி முகம்..

 விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 26,980 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் 11வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் 75955 வாக்குகள் பெற்றுள்ளார்.

திமுக வேட்பாளர் புகழேந்தி 46,297 வாக்குகள் பெற்றுள்ளார்.

விக்கிரவாண்டியில் 10-வது சுற்று வாக்கு எண்ணிக்கை:

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்:58,174 வாக்குகள்


திமுக வேட்பாளர் புகழேந்தி: 35,632 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி: 1,491 வாக்குகள்

நான்குனேரி 4-வது சுற்று வாக்கு எண்ணிக்கை

அதிமுக வேட்பாளர் நாராயணன்:19,473 வாக்குகள்
காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன்:12,331 வாக்குகள்
நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன்:702 வாக்குகள்

விக்கிரவாண்டியில் 5-வது சுற்று வாக்கு எண்ணிக்கை:

அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன்: 27,318 வாக்குகள்

திமுக வேட்பாளர் புகழேந்தி: 16,963 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி: 502 வாக்குகள்

நான்குனேரியில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி:

அதிமுக வேட்பாளர் நாராயணன்: 4,737 வாக்குகள்

காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன்: 2,865 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன்: 127 வாக்குகள்

நான்குநேரியில் அதிமுக வேட்பாளர் முன்னிலை


நான்குநேரியில் 3வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 14,462 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் முன்னிலை


விக்ரவாண்டியில் 7வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளார் முத்தமிழ்ச்செல்வன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி

 திமுக வசம் இருந்த விக்கிரவாண்டி தொகுதியையும், காங்கிரஸ் வசம் இருந்த நான்குனேரி தொகுதியையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.


விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதி இடைத் தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அதிமுகவின் பலம் 124 ஆக அதிகரித்துள்ளது. இவ்விரு தொகுதிகளை இழந்ததால் திமுகவின் பலம் 100 ஆகக் குறைந்தது.

காங்கிரஸ் வசம் இருந்த நான்குனேரி தொகுதியை கைப்பற்றியது அதிமுக: நாராயணன் அமோக வெற்றி

நான்குனேரி தொகுதியில் 32,811 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி அமோக வெற்றி பெற்றார்.

நான்குனேரி இடைத்தேர்தல்: 19-வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில்..

அதிமுக வேட்பாளர் நாராயணன்: 85,937 வாக்குகள்


காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன்:56,168 வாக்குகள்

நாம் தமிழர் வேட்பாளர் ராஜநாராயணன்:2322 வாக்குகள்

நான்குனேரியில் வெற்றியை நோக்கி அதிமுக

நான்குனேரி தொகுதியில் 27966 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயண் முன்னிலை வகிக்கிறார்.
18வது சுற்று முடிவில் நான்குனேரியில் அதிமுக வேட்பாளர் நாராயண் 82,020 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 54054 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

விக்கிரவாண்டியைக் கைப்பற்றியது அதிமுக

விக்கிரவாண்டி தொகுதியில் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் 1,13,428 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

நான்குனேரியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை

நான்குனேரி தொகுதியில் 23,035 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் நாராயணன் முன்னிலை வகிக்கிறார்.
நான்குனேரியில் 16வது சுற்றில் அதிமுக வேட்பாளர் நாராயண் 71,921 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 48,886 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.

உண்மைக்கு கிடைத்த வெற்றி: முதல்வர் பழனிசாமி பேச்சு

விக்கிரவாண்டி மற்றும் நான்குனேரி தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நான்குனேரியில் வெற்றி உறுதியாகியுள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி முகம் காணப்படும் நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு முதல்வர் பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளிடம் முதல்வர் பழனிசாமி பேசும்போது, கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒருமித்த கருத்தோடு செயல்பட்டதால் தான் இடைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது. இதுவே இந்த வெற்றிக்குக் காரணம் என்று கூறினார்.

 விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,551 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் மகத்தான வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com