நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை - உடனுக்குடன்

கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.
நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை - உடனுக்குடன்


கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதில் நாடு பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.

 இந்த ஊரடங்கு என்பதே மக்களைக் காப்பாற்றுவதற்குத்தான்...

 இதைப் பின்பற்றினால்தான் இந்தக் கடினமான சூழ்நிலையில் இருந்து நாடு வெளிவர முடியும்...

 இதுதான் ஒரே வழி....

 இந்தக் கடினமான சூழ்நிலையில் அரசு சொல்லும் ஆலோசனைகளை ஏற்று நாட்டு மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும்...

மத்திய, மாநில அரசுகள் சொல்வதைப் பின்பற்றினால் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்,...

அரசு மருத்துவமனைகளுடன் தனியார் மருத்துவமனைகளும் இணைந்திருக்கின்றன...

பாதுகாப்பு முக்கியம் என்று மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளோம்...

 மருத்துவ சாதனங்களுக்காக 15 ஆயிரம் கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது...

இந்தக் கடுமையான சூழ்நிலையில் உயிர்களைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர்..

 மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன...

 ஏழை, எளிய மக்களுக்கு மாநில அரசுகள் உதவிக் கொண்டு இருக்கின்றன...

 அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன...

அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்...

 உங்களைக் காப்பதற்காக 24 மணி நேரமும் காவல்துறையினர் இருக்கின்றனர்...

 24 மணி நேரமும் தகவல்களைச் சொல்ல ஊடகங்கள் இருக்கின்றன...

 சிக்கலான தருணத்தில் எத்தகைய கடுமையான பணியை மேற்கொள்கிறார்கள்...

 மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கஷ்டப்படுகின்றனர். நினைத்துப் பாருங்கள்...

 வீட்டிலிருந்தபடியே வழிபடுங்கள்...

 மற்ற நாடுகளாலேயே கூட கரோனாவைக் கட்டுப்படுத்த முடியவில்லை, எனவே, விலகியிருப்பதே நல்லது.

 வீட்டில் முடங்கினால்தான் கரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்...

 பிரதமரிலிருந்து சாதாரண குடிமகன் வரை விலகியிருந்தால்தான் தப்பிக்க முடியும்...

 கரோனாவைக் கட்டுப்படுத்த ஒரே வழி, வீட்டை வி்ட்டு வெளியே வராமல் இருப்பதுதான்...

 அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்...

 பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து வந்தவர்களைச் சந்திக்க வேண்டாம்...

 கரோனாவைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம்...

 சீனா, அமெரிக்கா, இத்தாலியில் பரவிய தொற்று பலரைப் பலிகொண்டுவிட்டது...

 ஒருவருக்கும் தெரியாமலேயே கரோனா தொற்றக் கூடும்...

 வெறும் 11 நாள்களில் ஒரு லட்சத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது...

 உறவினர்களைக்கூட உள்ளே அனுமதிக்க வேண்டாம்...

 வீட்டில் ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுவிடும்...

 வீட்டுக்குள் வெளியாள்கள் யாரையும் அனுமதிக்காதீர்கள்...

 கரோனாவென்றால் யாரும் வெளியே நடமாடக் கூடாது...

 இதைத் தடுக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன...

 அவ்வாறு கரோனா தாக்கினால் அடுத்த ஒரு வாரம் அனைவருடனும் அவர்கள் கலந்துதான் இருப்பார்கள்...

 வீட்டைவிட்டு வெளியே வைக்கும் ஒவ்வோர் அடியும் கரோனாவை அழைத்துவரக் கூடியது...

 உங்கள் வீட்டில் ஒருவராகக் கூறுகிறேன்... எடுத்துக் கொள்ளுங்கள்...

 மருத்துவர்கள் தவிர யாருக்கும் அனுமதியில்லை...

 ஊரடங்கிற்கு அனைத்து மக்களும் ஒத்துழைக்க வேண்டும்...

 ஒவ்வொரு இந்தியரும் எனக்கு முக்கியம்....

 அடுத்த 21 நாள்களுக்கு ஊரடங்கு அமல்...

 இது மிகவும் முக்கியமான நடவடிக்கை...

 தடுப்பு நடவடிக்கையாகத்தான் இந்த ஊரடங்கு...

 உங்கள் நாட்டையும் குடும்பத்தையும் காப்பதற்கே இந்த நடவடிக்கை...

 இதனால் நாடு முழுவதும் முடக்கப்படும்...

 இன்றிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது...

 ஒவ்வொரு தனிமனிதருக்கும் பொறுப்பு இருக்கிறது...

 அலட்சியமாக இருந்துவிடக் கூடாது...

நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்...

 கரோனா யாரையும் விட்டுவைப்பதில்லை...

 சமூக இடைவெளி மட்டும்தான்  ஒரே தீர்வு...

 கரானோ நம்மைத் தாக்காது என நினைக்கக் கூடாது...

மக்கள் ஊரடங்கை வெற்றி பெறச் செய்ததன் மூலம் மக்கள் ஒற்றுமையைக் காட்டியுள்ளனர்...

 குழந்தைகள், பெரியவர்கள், வணிகர்கள் அனைவரும் இணைந்து போராட வேண்டும்...

 ஒவ்வொருவருக்கும் பொறுப்பு இருக்கிறது...

 அனைவரும் இணைந்து போராட வேண்டும்...

மீண்டும் கரோனா பற்றிப் பேச வந்துள்ளேன்...

 நாட்டு மக்களுக்குப் பிரதமர் உரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com