இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்
இடைக்கால பட்ஜெட்: முக்கியம்சங்கள்

 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.

பட்ஜெட்டின் முக்கியம்சங்கள்..
 

 புதிய மருத்துவ கல்லூரிகளை அமைப்பதற்கு 2470.93 கோடி ஒதுக்கீடு

ஒட்டுமொத்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை 19420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கைத்தறி துறை ஆயிரத்து 222 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
சமூக நலத்துறைக்கு 1953 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

 565 கோடி ரூபாய் செலவில் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீரை சரபங்கா வடிநிலத்தில் உள்ள வறண்ட ஏரிகளுக்குக் கொண்டு செல்லும் திட்டப் பணிகள் விரைவில் முடிவடையும்.

நீர்வள ஆதாரத்துறைக்கு 6 ஆயிரத்து 453 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 

ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு: ஓ. பன்னீர்செல்வம்

தமிழகத்தின் நிதித் தேவைக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இடைக்கால பட்ஜெட்டில், ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருப்பதாவது, 
தமிழக நிதித் தேவைகளுக்காக ரூ.84,686 கோடி கடன் வாங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் நிலுவைக் கடன் ரூ.5,70,108.29 கோடியாக இருக்கும். 
உற்பத்தி மதிப்பீட்டில் இது 26.69 சதவீதமாகும். 
தமிழகத்தின் கடன் அளவு 15வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளதாக பட்ஜெட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 71,766 பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இதற்காக ரூ.39,941 கோடியில் 62 முதலீடுகளுக்கு விரைவில் தமிழக அரசு அனுமதி அளிக்கவிருக்கிறது என்று நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

 புதிய நீதிமன்றங்களைக் கட்ட ரூ.289.78 கோடி ரூபாயும், ஒட்டுமொத்தமாக நீதித்துறைக்கு ரூ.1,437.82 கோடியும் ஒதுக்கீடு.

தமிழகத்துக்கு வழங்கப்படும் தேசிய பேரிடர் நிவாரண நிதி போதுமானதாக இல்லை.
போக்குவரத்துத் துறைக்கு ரூ.3,717.36 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 நகர்ப்புற வடிகால் திட்டத்துக்கு ரூ.1450 கோடி ஒதுக்கீடு.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.2,350 கோடி ஒதுக்கீடு.
சென்னையைத் தனித்தன்மை வாய்ந்த நகரமாக மாற்ற ரூ.3,410 கோடி ஒதுக்கீடு.

அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம்: ஓ. பன்னீர்செல்வம்

தமிழக இடைக்கால பட்ஜெட்டில் அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக இடைக்கால பட்ஜெட்டை தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.
அதில், எல்ஐசி மற்றும் யுனைடட் காப்பீடு இந்தியா திட்டத்துடன் இணைந்து ஏழை மக்களுக்கு புதிய காப்பீடு திட்டம் துவக்கப்படுகிறது.
இதற்கான செலவுத் தொகையை தமிழக அரசே ஏற்றுக் கொள்ளும். 
தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 55.67 இலட்சம் தகுதியான குடும்பங்களுக்கு, குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். மேலும், குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும், நிரந்தர இயலாமைக்கு 2 இலட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும்.

 நீர்ப்பாசனத்துக்கு ரூ.6,453 கோடி ஒதுக்கீடு

பயிர்க் காப்பீடுத் துறைக்கு ரூ.1,738 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மீன்வளத் துறைக்கு ரூ.580 கோடி ஒதுக்கீடு.
கைத்தறி மற்றும் துணி நூல் துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.
மாற்றுத் திறனாளிகளுக்காகக் கண்டறியப்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

 பெட்ரோல், டீசல் மீதான கூடுதல் வரி வருவாயில் இருந்து மாநிலத்துக்கு உரிய பங்கு கிடைப்பதில்லை.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ.1,953 கோடி ஒதுக்கீடு.

 தமிழ்நாடு திறன் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரைட்ஸ் என்ற சிறப்புத் திட்டம்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் டிசம்பரில் முடிவடையும்.

 வேளாண்துறைக்கு ரூ.11,982 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பழங்குடியின துணைத் திட்டங்களுக்கு ரூ.1,276 கோடி ஒதுக்கீடு.
மின்கட்டண மானியங்களுக்கு ரூ.8,834 கோடி ஒதுக்கீடு.
அம்மா சிறு மருத்துவமனைகளுக்கு ரூ.144 கோடி ஒதுக்கீடு
தமிழக ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.22,218 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்துத் துறைக்கு ரூ.623 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

 பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு மாநில அரசின் பங்காக ரூ.3548 கோடி ஒதுக்கீடு.

நடப்பு நிதியாண்டில் அதிகரித்திருக்கும் நிதிப் பற்றாக்குறை தவிர்க்க முடியாதது.
காவல்துறையை நவீனமயமாக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு.

 உயர்கல்வித் துறையில் ரூ.5,478.19 கோடி ஒதுக்கீடு.

மீன்வளத்துறைக்கு ரூ.580.97 கோடி  ஒதுக்கீடு.
சுகாதாரத் துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

 மாற்றுத்திறநாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு ரூ.688 கோடி  ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மீன்வளத்துறை ரூ.580 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்புத் துறைக்கு ரூ.436.68 கோடி ஒதுக்கீடு.
கரோனா தடுப்பூசி திட்டத்துக்கான செலவினத்தை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கிறோம்.
விவசாயிகளுக்கான பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ.1,738.81 கோடி ஒதுக்கீடு.
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும்.

 தமிழக தொழில் முதலீட்டு கழகத்துக்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நீதி நிர்வாகத்துக்கு,  1437.82 கோடி ஒதுக்கீடு.
மின்துறைக்கு ரூ.7,217 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்துக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.5000 கோடி  ஒதுக்கீடு செய்யப்படும்.

 எதிர்க்கட்சிகளின் கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கி, அதிமுக அரசு ஐந்து ஆண்டு கால ஆட்சியை தந்திருக்கிறது.

காவல்துறைக்கு வரும் ஆண்டில் ரூ.9,567 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
கரோனா பேரிடருக்கான செலவித் தொகை ரூ.13,352 கோடி.
தமிழக அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியாக இருக்கும்.

 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை கணிப்பொறி அறிவியல் பாடம் அறிமுகம் செய்யப்படும்.

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முதற்கட்ட ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் வெறும் 2 சதவீதம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் கரோனா பலி விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது.

இடைக்கால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

சென்னை: தமிழகத்தின் இடைக்கால பட்ஜட் உரையை புறக்கணித்து திமுக எம்எல்ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, துரைமுருகன் பேச அனுமதி வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அமளிக்கிடையே ஓ. பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட் உரையைத் தொடங்கியதை அடுத்து, திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அனுமதி

தமிழக இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய அவைத் தலைவர் தனபால் அனுமதி அளித்ததையடுத்து, கடும் அமளிக்கிடையே துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

சட்டப்பேரவையில் அமளி

 பட்ஜெட் உரையை வாசிக்கும் முன்பே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பட்ஜெட் உரைக்கு முன்பே, தங்களுக்குப் பேச அனுமதி அளிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதனை அவைத் தலைவர் தனபால் ஏற்காததால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.

ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் தரிசனம்

பேரவையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
முன்னதாக, சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலுக்கு வந்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அங்கு சுவாமி தரிசனம் செய்தார்.

எத்தனை நாள்கள் கூட்டம்?

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க பேரவையின் அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது. பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவா் பி.தனபாலின் அறையில் நடைபெறும் கூட்டத்தில், பேரவை கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். பிப்ரவரி 25 அல்லது 26-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற வாய்ப்பு உள்ளது. கூட்டத் தொடரின் இறுதி நாளில், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க உள்ளாா்.

என்னென்ன அம்சங்கள்?

கடந்த 2016-17-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை, 2016 பிப்.16-இல் நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்தாா். அதில், கடன் அளவு ரூ.2.47 லட்சம் கோடியாக இருந்தது. தமிழக அரசின் சாா்பில் செயல்படுத்தப்பட்ட ஒவ்வொரு திட்டத்துக்கான நிதிகள் ஒதுக்கீடும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி, 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் போன்ற திட்டங்களால் தமிழக அரசுக்கான செலவுகள் இப்போது அதிகரித்துள்ளன. கரோனா நோய்த் தொற்று காரணமாக, கடந்த நிதியாண்டுகளுடன் ஒப்பிடும் போது, நிகழ் நிதியாண்டில் வருவாய் வரவுகள் வெகுவாகக் குறைந்திருந்தன. இந்த வரவுகள் இப்போதுதான் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால், வருவாய் செலவினங்களும், கடன் சுமைகளும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிதித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்த விவரங்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்படும்.

ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்யும் 11-வது பட்ஜெட்

 துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீா்செல்வம் தனது 11-வது பட்ஜெட்டை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறாா்.

 கனடாவில் உள்ள டோரண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கையை உருவாக்க தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடி நிதியளிக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு பாரம்பரியம்மிக்க பண்பாட்டைக் கொண்டிருப்பதுடன், தமிழ் மொழியானது உலகில் மிகத் தொன்மை வாய்யத மொழியாகவும் திகழ்கிறது. தமிழ் மொழி மற்றும் பண்பாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ் பண்பாட்டைப் போற்றும் விதமாக, இந்த ஆண்டு முதல், தைப்பூசம் திருநாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் மொழியின் மாண்பிற்காகப் போராடியவர்களுக்கு தொடர்ந்து சிறப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு மாதாந்திர உதவித் தொகையும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ் அறிஞர்களுக்கான உதவித்தொகையை 497 நபர்கள் பெற்று வருவதுடன், தமிழ்மொழி பேசும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கப் போராடிய 137 எல்லை வீரர்களும் உதவித் தொகையைப் பெற்று வருகின்றனர்.

தமிழ் அறிஞர்களுக்கு ஆண்டுதோறும் மொத்தமாக 78 விருதுகள் வழங்கப்படுவதுடன், தற்போது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது மற்றும் காரைக்கால் அம்மையார் விருது ஆகிய இரண்டு புதிய விருதுகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. 

மதுரையிலுள்ள உலகத் தமிழ்ச் சங்கத்திற்காக, 87,300 சதுர அடி பரப்பளவில் 37.25 கோடி ரூபாய் செலவில் பெருந்திட்ட வளாகம் கட்டப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஆண்டுத் தொகுப்பு மானியமானது 5.98 கோடி ரூபாயிலிருந்து 24.92 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 

ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தைப் போன்றே, கனடாவிலுள்ள டொரண்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 நடப்பு நிதியாண்டில் தமிழக அரசின் வருவாய் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 530 கோடி 30 லட்சம் ரூபாயாகவும் வருவாய் செலவுகள் 2 லட்சத்து 46 ஆயிரத்து 694 கோடியே 69 லட்சம் ரூபாயாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் வரவுக்கும் செலவுக்கும் ஆன பற்றாக்குறை 65,994.06 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் செலவினங்களை குறைத்து அதன் காரணமாக 13 ஆயிரத்து 250 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டு உள்ளது. மேலும் பெரும் தொற்று காரணமாக நிவாரண பணிகளுக்கு 2,917. 85 கோடி ரூபாய் வருவாய் கணக்கில் கூடுதலாக செலவினம் ஏற்பட்டுள்ளது.

11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470 கோடி

சென்னை: தமிழகத்தில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2,470.93 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்பில்,  தமிழகத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. அதற்காக ரூ.2,470 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன் மூலம் தமிழகத்தில் கூடுதலாக 1650 மருத்துவ மாணவ சேர்க்கை இடங்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com