அந்த முதல் தேர்தல்: இ.வி. ஜெயராமன்

எனக்கு கடந்த 1967-ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தது. மன்னார்குடி அருகேயுள்ள எடகீழையூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் முதல் வாக்கைப் பதிவு செய்தேன்.
அந்த முதல் தேர்தல்: இ.வி. ஜெயராமன்



எனக்கு கடந்த 1967-ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தது. மன்னார்குடி அருகேயுள்ள எடகீழையூர் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் முதல் வாக்கைப் பதிவு செய்தேன்.
சிறுவனாக இருந்தபோது, அரைக்கால் சட்டை அணிந்த ஒத்த வயதுடைய சிறுவர்கள் பத்து பேர் சேர்ந்துகொண்டு கட்சிக் கொடியைப் பிடித்தபடி, போடுங்கம்மா ஓட்டு காளை மாட்டு சின்னத்தைப் பார்த்து என கோஷமிட்டப்படி சென்றது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.
ஒரு முறை மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் தஞ்சை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சிங்கார வடிவேலும், திமுக சார்பில் அன்பில் தர்மலிங்கமும் போட்டியிட்டனர். அப்போது, இரு கட்சியினரும் செய்த தேர்தல் பிரசாரத்தை போன்று இதுவரை, எந்தத் தேர்தலிலும் நான் பார்ததில்லை. அந்தத் தேர்தலில் சிங்கார வடிவேலு வெற்றி பெற்றார்.
தேர்தல் செலவுக்கு வேட்பாளரோ, கட்சியோ பணம் தராது. கட்சித் தொண்டர்களே தங்களின் சொந்த பணத்தைக் கொண்டு பிரசாரம் செய்வர். இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் வாக்குரிமையை செலுத்தியிருக்கிறேன். படித்தவர்களும், பணக்காரர்களும் வாக்களிக்க முன் வரவேண்டும். வாக்களிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே போன்று யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பது முக்கியம். தபால் ஓட்டுகளில் செல்லாத ஓட்டுகள் இருக்கும் நிலை மாறும் வகையில் ஜனநாயகக் கடமை ஆற்ற, அச்சமின்றி அரசு ஊழியர்களும் முன்வர வேண்டும். அப்போது தான் நூறு சதவீத வாக்குப்பதிவு சாத்தியமாகும்.


- இ.வி. ஜெயராமன் (73), 
ஓய்வுபெற்ற அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர், மன்னார்குடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com