2012ம் ஆண்டுக்கான தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு

தமிழ் இசையின் எழுபதாம் ஆண்டு விழாவில், கலைமாமணி எம்.பி.என் பொன்னுசாமி மற்றும் சாமி தண்டபாணிக்கு 2012ம் ஆண்டுக்கான விருதுகளை சென்னைத் தமிழ் இசைச் சங்கம் வழங்குகிறது.
2012ம் ஆண்டுக்கான தமிழ் இசைச் சங்க விருதுகள் அறிவிப்பு

சென்னைத் தமிழ் இசைச் சங்கம், தமிழ் இசையின் எழுபதாம் ஆண்டு விழாவில், கலைமாமணி எம்.பி.என் பொன்னுசாமிக்கு "இசைப்பேரறிஞர்" விருதினையும், சங்கீதபூஷணம் சாமி தண்டபாணிக்கு "பண்இசைப் பேரறிஞர்" விருதினையும் டிச.,21ம் தேதியன்று வழங்குகிறது. இந்த தமிழ் இசைச் சங்க விருது வழங்கும் விழா இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெறுகிறது.

பரம்பரையாக நாகசுரக் கலைஞர்களின் குடும்பத்தின் வழிவந்த எம்.பி.என் பொன்னுசாமி, நாகசுரக் கலைஞர், தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் நாகசுரம் வாசித்து உலகப் புகழ் பெற்றவர். இவர் கலைமாமணி, ஏழிசை வேந்தர், பெருவங்கிய பேரரசு போன்ற சிறப்புமிகு பட்டங்களைப் பெற்றவர்.

சாமி தண்டபாணி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று சங்கீத பூஷணம் பட்டம் பெற்றவர். இப்போது லண்டன் சிவன் கோயிலில் திருப்பணி ஆற்றி வருகிறார். அரனருள் என்ற அமைப்பினை உருவாக்கி, அதன் மூலம் பண்ணிசை பயிற்றுவித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com