கடன் தொல்லைகள் தீர்க்கும் சௌந்தர்யபுரம் ஸ்ரீ பத்ம சக்ரம்

கடன் தொல்லைகள் தீர்க்கும் சௌந்தர்யபுரம் ஸ்ரீ பத்ம சக்ரம்

சந்த்ராம் ப்ரபாஸாம் என்று வேதத்தில் பத்ம நேமிம் இங்கு நேமி என்றால் சக்ரம் என்று பொருள் அப்பேர்பட்ட எங்குமே கூறாத ரகசியமாக வைத்திருந்த இச்சக்கரத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது வேதமே.

சந்த்ராம் ப்ரபாஸாம் என்று வேதத்தில் பத்ம நேமிம் இங்கு நேமி என்றால் சக்ரம் என்று பொருள் அப்பேர்பட்ட எங்குமே கூறாத ரகசியமாக வைத்திருந்த இச்சக்கரத்தை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது வேதமே. இச்சக்ரத்தை கையில் ஏந்தியவளை சரணமடைந்தாள் அவர்களின் துர்பிக்ஷங்களை போக்கி லக்ஷமி கடாக்ஷத்தை அளிப்பேன் என்று தாயாரின் உறுதியை கூறுகிறது இந்த வேத வாக்கியம்.

இச்சக்ரம் உலகில் எங்கும் ப்ரதிஷ்டை செய்யவில்லை என்று ஏங்கியவர்களுக்கு இக்குறையை தீர்த்து வைத்தனர் பெரியவர்கள். பல ஆண்டுகளுக்கு முன்னரே இச்சக்கரம் ஸ்ரீ அம்புஜவல்லியின் ப்ராத்தனைக்கு பகவான் செவிமடுத்து பிரதிஷ்டையாக ஸெளந்தர்ய தம்பதிகளாய் வீற்றிருப்பதால் இந்த அழகையே பெயராக ஸெளந்தர்யபுரம் என்றே இக்கிராமம் அழைக்கப்படுகிறது. இச்சக்ரத்தின் வடிவழகைப் பார்ப்போம்.

மத்தியில் மேரு பர்வதத்தை குறிக்கும் வகையில் ஓர் கர்ணிகையும், அதை ஒட்டினாற்போல் இருவளையங்களும், அதை சுற்றி அஷ்டைஸ்வர்யங்களான (சேஷம, ஸ்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஐஸ்வர்யங்களை) தந்தருளும் அஷ்டலக்ஷ்மிகளான, தான்யலக்ஷ்மி, தைர்யலக்ஷ்மி, கஜலக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, விஜயலக்ஷ்மி, வித்யாலக்ஷ்மி, தனலக்ஷ்மி ஆகிய இவர்கள் அதில் நித்யவாசங்கள் செய்து,

அதன் மத்தியில் அம்புஜவல்லீயுடன் சேர்ந்து நவசக்தியாக நம்மை காத்தருளுகின்றனர். இச்சக்ரத்தில் ஸ்ரக்தரா விருத்தத்தை குறிக்கும் வகையில் 44 இதழ்களை கொண்டுள்ளது.

மேலும் ரிக், யஜூர், ஸாம, அதர்வண எனும் நான்கு வேதத்திற்கு சமமாக இச்சக்கரத்திற்கு நாற்புறமும் நான்கு தீஜ்வாலைகளையும், அந்த ஜ்வாலையில் லக்ஷ்மி நருசிம்மர், லக்ஷ்மி, ஹயக்ரீவர், வராஹர், ஸ்ரீ கிருஷ்ணர் ஏளியுள்ளனர். இச்சக்ரத்தின் பக்கவாட்டில் இரண்டு சிங்கங்களை வாகனமாக்கி அவகைகளின் முதுகில் அமர்ந்திருப்பது, அவைகள் இச்சக்ரத்தை ஒய்யாரமாய் தாங்கி கொண்டிருப்பது கண்கொள்ளா காட்சியாகும். இதன் மூர்த்தி சிறிதாயினும் அதன் கீர்த்தியோ மிகமிகப் பெரியது என்பது அங்கு வந்து நேரில் கண்டவர்களுக்கே இந்த அனுபவம் கிட்டும்.

இச்சக்ரத்தை சேவிப்பதனால் ஏற்படும் பலன்கள்

• இச்சக்ரம் மஹாலக்ஷ்மியின் அம்சமாக இருப்பதால், தாயாரின் மூலமாக எவ்வித பலன்கள் கிடைக்குமோ, அதில் எள்ளளவும் குறையாமல் கிடைப்பது உறுதி.

• அவை மட்டுமில்லாமல் இச்சக்கரத்தில் அஷ்ட லக்ஷ்மிகளில் எட்டு இதழ்களில் வீற்றிருப்பதால் அஷ்ட ஐஸ்வர்யங்களான சேஷம, ஸ்தைர்ய, வீர்ய, விஜய, ஆயுர், ஆரோக்ய, ஐஸ்வர்யங்கள் கிட்டும்.

• கடன் தொலைகள் அகலும்.

• நினைத்த கார்யங்கள் கைகூடும்.

• திருமண தடைகள் கண்டிப்பாக நீங்கும்.

• ஸத் ஸந்தான ப்ராப்திகள் ஏற்படும்.

• தன தான்ய அபிவிருத்தி உண்டாகும்.

• வியாபாரத்தில் ஏற்றங்கள் ஏற்பட்டு, எதிர்பார்த்த முன்னேற்றங்கள் ஏற்படுவது திண்ணம்.

• பய நிவிருத்தி

• வித்யா அபிவிருத்தி போன்ற பற்பல பலன்கள் கிடைப்பது நிச்சயம்.

இப்பேர்பட்ட இச்சன்னதியானது காஞ்சிபுரத்தில் இருந்து 33 கி.மீ வந்தவாசி அருகில் தென்னாங்கூர் பாண்டுரங்கள் திருக்கோவிலக்கு 5 கி.மீட்டர் அருகில் சௌர்தர்யபுரத்தில் உள்ள ஆதிகேசவப் பெருமான் ஆலயத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு வந்தவாசியில் இருந்து ஒரு மணிக்கு ஒரு முறை மினி பேருந்து வசதி உண்டு. சென்னையிலிருந்து காலை 7.00 மணிக்கு 148 வந்தவாசி பேருந்தும் ஒன்று உண்டு. இங்கு வரும் சேவார்த்திகளுக்கு சேவை பண்ணி வைக்க ஓர் அர்ச்சகர் அங்கே தங்கியுள்ளார்.

முக்கிய குறிப்பு;

பிரதி தினம் காலை 10.30 மணிக்கு அன்னதானம் நடைபெறும். அனைவருக்கும் அஷ்டலக்ஷ்மியின் பிரசாதங்களை பெற்றுத்தர 108 பௌர்ணமியில் யாகங்கள் நமது சன்னதியில் வைகாசி பௌர்ணமி முதல் தொடர்ச்சியாக 9 வருடங்கள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. இதில் கல்யாண தடைநீங்கி விரைவில் விவாஹம் நடைபெற சப்சந்தான ப்ரார்த்தி ஏற்பட மன அமைதி பெற சகல கார்யங்கள் வீடேற இது முதலான பலன்களை பெற்றிட பெளர்ணமி யாகத்தில் அனைவரும் கலந்து கொள்ளலாம். அன்றைய தினம் ஸ்ரீ பத்ம சக்ரத்திற்கு திருமஞ்சனம் நடைபெறும். அடுத்த பௌர்ணமி யாகம் அக்டோபர் 27 வருகிறது.

தகவல்களுக்கு : 9894191094 (விஜயராகவன்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com