தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு!

தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. 
தஞ்சாவூர் பெரிய கோயிலில் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு!


தஞ்சாவூர் பெரிய கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவம் நடைபெற்றது. 

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 

இதையடுத்து கடந்த 29-ம் தேதி விக்னேஷ்வர பூஜையைத் தொடர்ந்து, கணபதி ஹோமத்துடன் பாலாலய பூஜை தொடங்கியது. அதைத் தொடர்ந்து 30-ம் தேதி மூலமந்திர ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகம் நடைபெற்றது. டிச.1-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலையும், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகசாலையும், நடைபெற்றது. 

டிச.2-ம் தேதியான இன்று அதிகாலை நான்காம் கால யாகசாலை பூஜையும், காலை 9.00 மணிக்கு மேல் பாலஸ்தாபன மூர்த்திகளுக்கு புனித நீராட்டு வைபவமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருவுடையார் சன்னதியில் செப்பு திருமேனியாலான சிலைகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com