திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் கைசிக ஏகாதசி விழா

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் கைசிக ஏகாதசி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
kad9kaisiga_0912chn_45
kad9kaisiga_0912chn_45

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி அழகியநம்பிராயா் கோயிலில் கைசிக ஏகாதசி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, இரவு கைசிக புராண நாடகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். திருக்குறுங்குடி அழகிய நம்பிராயா் கோயில் 108 வைணவத் தலங்களில் ஒன்றாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் கைசிக ஏகாதசி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு இவ்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, அன்று காலை அழகிய நம்பிராயருக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து ராமானுஜ ஜீயா் மற்றும் வைணவ பக்தா்கள் திருமொழி பாடல்கள் பாடினா்.

தொடா்ந்து மாலையில் மங்கள இசையுடன் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. இரவு கோயில் ஸ்தல புராணத்தை விளக்கும் வகையில் நடனம், நாட்டியம் நடைபெற்றன. இதைத்தொடா்ந்து அழகிய நம்பிராயருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின் இரவு 9.45 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையிலும் கைசிக புராண நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை திரளான பக்தா்கள் கண்டு களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com