யோகமில்லாத ஜாதகருக்கு வாஸ்துவால் ஏற்படும் நன்மைகள்!

நம் முகவுரையில் வாஸ்துவை பற்றிய சிறுதொகுப்பு பார்ப்போம். வாஸ்து சாஸ்திரம் என்பது..
யோகமில்லாத ஜாதகருக்கு வாஸ்துவால் ஏற்படும் நன்மைகள்!

நம் முகவுரையில் வாஸ்துவை பற்றிய சிறுதொகுப்பு பார்ப்போம். வாஸ்து சாஸ்திரம் என்பது கி.மு 3000 வருடங்களுக்கு முன்பே இந்த பிரபஞ்சத்தில் உருவான ஒன்று.   நம் முன்னோர்கள் வாஸ்து முறைப்படி  கட்டிய அரச மாளிகைகள்,  நடுத்தர அமைப்புள்ள  வீடுகள், பிரபாண்ட கோவில்கள் இன்றும் முன்னுதாரணமாக நமக்கு பறைசாற்றுகிறது.  

இன்றும் நம் வட இந்தியாவில், காரைக்குடி பகுதிகளில், மற்றும் கிராமப்புற என்று பழைய வாஸ்து முறைப்படி வீடுகளை புதிப்பித்து பாதுகாத்து வருகின்றனர்.  எடுத்துக்காட்டாக இன்றும்  சிவன் கோவில்களில் பார்த்தால் ஈஸ்வரர், அம்பிகையை சுற்றி மற்ற கடவுள்களான லிங்கம்,  பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், நவக்கிர மூர்த்திகள், நாயன்மார்கள் மற்றும் கொடிமரம் என்று எல்லாம்  சரியான திசைகளில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் அக்கால அரசர்களின் வாஸ்து முறைகளை பின்பற்றிய அடையாள சான்றுகள். 

இந்துக்களின் வேதங்களின் ஒன்றான அதர்வண வேதம், பிருஹத் சம்ஹிதை ஜோதிடம், மானசாரம், மயமதம், மற்றும்  விஸ்வகர்மீயம் முதலிய பல்வேறு நூல்களில் தனிப்பட வாஸ்து சாஸ்திரம் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளது. விஸ்வகர்மாவினால் உருவாக்கப்பட்டது இந்த வாஸ்து சாஸ்திரம் என்றும் கூறுகின்றனர்.  

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஸ்ரீ லலிதா நவரத்னம் என்னும் நூலொன்று பண்டைக் காலத்தில் ஏற்பட்ட சிற்ப நூல்களாக 32 நூல்களைப் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்று ஒரு சில புத்தங்கள் மட்டும் உள்ளது மற்றவை கிடைக்கப்படவில்லை. 

என்னை பொறுத்தவரை வேத ஜோதிடம் என்பது தனிமனித வாழும் கர்மாவின் கணக்கு அவற்றை நாம் அனுபவிக்கவேண்டிய ஒரு கட்டாயம். ஆனால் ஒருவித கூட்டு  குடும்ப வாழ்க்கை என்பது சந்தோஷமான வாழ ஒரு வித்து என்பது அவரவர் வீடு என்று சொல்லலாம்.  சிலபேரால் வீட்டை விட்டு வரவேமாட்ர்கள் காரணம் அவர்கள் வீடு அவர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.  அதுவும் வாஸ்து சாஸ்திர முறைப்படி வீடு இருந்து விட்டால் போதும் பரம்பரை பரம்பரையாக வாழ்க்கை அமோகமாக வாழ்ந்துவிடுவார்கள். நம் வீடும் உயிரூட்டும் கற்களை,  மணல்களை,  கம்பிகளை,  சிமெண்டை கொண்டது. உலகமே பஞ்சபூத தத்துவத்தில் தான் வாழ்கிறது. இவற்றில் வாஸ்து மட்டும் விதிவிலக்கா. 

வாஸ்து மூலைகள் என்று கூறப்படும் வடக்கும் கிழக்கும் இணைக்கும் இடம் வடகிழக்கு மூலையாகும் (ஈசான்ய / சனி மூலை). தெற்கும் கிழக்கும் இணைக்கும் இடம் தென்கிழக்கு மூலையாகும் (அக்னி மூலை). தெற்கும் மேற்கும் இணைக்கும் இடம் தென்மேற்கு மூலையாகும் (நைருதி / கன்னி மூலை) மற்றும் வடக்கும் மேற்கும் இணைக்கும் இடம் வடமேற்கு மூலையாகும்(வாயு மூலை) என்று பிரிக்கப்பட்டு அதற்கேற்ப கட்டிட அமைப்பு இருக்கவேண்டும். 

வாஸ்து என்பதும் பஞ்ச பூதங்களான ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி ஆகியவற்றின்  கூட்டமைப்பு. பஞ்ச பூதங்கள் அனைத்திற்கும் தனித்தனியாகச் சிறப்பியல்புகள், திசைகள் மற்றும் தனிப்பட்ட குணங்கள் உள்ளன. முக்கிய நான்கு திசை என்று நினைப்போம் ஆனால் வாஸ்துவுக்கு 8  திக்குகள் அடக்கம். இந்த எட்டுத் திசைகளிலும் சரியாக அமையப்பெற்ற வீட்டில் அஷ்டலக்ஷ்மி குடியேறுவாள், உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும், சுப செலவு உருவாகும், திருமணம் நடைபெறும், குழந்தைகள் சுபிட்சம் அனைத்தும் அந்த வீட்டில் வாசம் கொள்ளும். சூரியனைப் பூமி சுற்றும் திசை, காற்று வீசும் திசை, நீரின் ஓட்டம், ஆகியவற்றின் சூட்சமம் அனைத்தும் பஞ்சபூத அடிப்படையில்தான் கட்டிடம் அமைக்க பெரும் என்பது நம் முன்னோர்கள் சாஸ்திரங்களை கொண்டு வழிவகுத்தனர். இவையே மனையடி மற்றும்  வாஸ்து சாஸ்திரம் என்று ஒரு உட்பிரிவும் உள்ளது.

வரும் வரவிருக்கும் பகுதிகளில் வாஸ்து பூதத்தைப் பற்றியும், அவர் எழுத்திற்கும் காலம் பற்றியும், மனையடி சாஸ்திரம், வாஸ்து மூலைகளின் விளக்கத்தையும்  பற்றியும் பார்ப்போம் .

- ஜோதிட சிரோன்மணி தேவி

Whats app: 8939115647
Email: vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com