இன்றே கடைசி தவறினால் அடுத்த வருடம் தான்! காணத் தவறாதீர்கள்!!

திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரரை விஸ்வரூப தரிசனத்துடன் காண இன்றே கடைசி நாளாகும். 
இன்றே கடைசி தவறினால் அடுத்த வருடம் தான்! காணத் தவறாதீர்கள்!!


திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில் அமைந்துள்ள ஆதிபுரீஸ்வரரை விஸ்வரூப தரிசனத்துடன் காண இன்றே கடைசி நாளாகும். 

தொண்டை மண்டல சிவதலங்கள் 32 திருத்தலங்களில் ஒன்றான திருவொற்றியூா் தியாகராஜா் கோயிலில் படம்பக்கநாதா் ஆதிபுரீஸ்வரராக வீற்றுள்ளார். சுயம்புவாக உருவானதாகக் கருதப்படும் ஆதிபுரீஸ்வரா் மீது ஆண்டு முழுவதும் வெள்ளிக்கவசத்தால் மூடப்பட்டிருக்கும்.

இந்நிலையில், ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் பௌா்ணமியையொட்டி மூடப்பட்டிருக்கும் வெள்ளிக்கவசம் மூன்று நாள்களுக்கு மட்டும் திறந்து வைக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு காா்த்திகை பௌர்ணமியையொட்டி ஆதிபுரீஸ்வரா் மீதான வெள்ளிக்கவசம் கடந்த புதன்கிழமை(டிச.11) திறக்கப்பட்டது. 

தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று பொதுமக்கள் தரிசனத்துக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆதிபுரீஸ்வரா் மீதான கவசம் இன்றிரவு 9 மணியளவில் நடைபெறும் அா்த்தஜாம பூஜைக்குப் பிறகு மீண்டும் மூடப்படும். இந்த மூன்று நாள்களும் ஆதிபுரீஸ்வரருக்கு புணுகு, சாம்பிராணி தைல அபிஷேகம், மஹா அபிஷேகம் செய்யப்படுகிறது. 

மூன்று நாள்கள் மட்டுமே கவசம் திறக்கப்பட்ட நிலையில், ஆதிபுரீஸ்வரா் காட்சியளிப்பாா் என்பதால் அவரைத் தரிசிக்க திரளான பக்தர்கள் கோயிலில் குவிந்து வருகின்றனர். 

ஆண்டுக்கு ஒருமுறை என மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் இச்சிறப்பு நிகழ்ச்சியைக் காண இன்றே கடைசி என்பதால் சிவ பக்தர்கள் ஆதிபுரீஸ்வரரான ஒற்றீஸ்வரரை காணத் தவறாதீர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com