இந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 08 முதல் நவம்பர் 14 வரை)
இந்த வாரம் (நவ.8-14) யோகம் தரும் ராசிகளில் உங்க ராசி இருக்கா?

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் அவர்கள் இந்த வார (நவம்பர் 08 முதல் நவம்பர் 14 வரை) ராசி பலன்களை துல்லியமாக நமக்கு கணித்து வழங்கியுள்ளார்.


மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

புதிய உற்சாகம் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். உற்றார் உறவினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். பழைய தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் செயல்வடிவம் பெற்று வெற்றிகளைக் கொடுக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அனைத்து வேலைகளும் சந்தோஷமாக முடியும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு வேறு வேலைப்பிரிவில் மாற்றம் உண்டாகும். வியாபாரிகளுக்கு மறைமுக மற்றும் நேர்முக எதிர்ப்புகள் படிப்படியாகக் குறையும். வியாபாரத்தில் முக்கியத் திருப்பங்களை எதிர்பார்க்கலாம். விவசாயிகளின் உடல் உழைப்புக்கு இருமடங்கு லாபம் கிட்டும். பழைய கடன்கள் வசூலாகி பொருளாதார நிலைமை சீரடையும். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். இதனால் புதிய பொறுப்புகளை ஏற்றுச் செயல்படுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு மனதிற்கினிய புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பத்தாருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புண்டு. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். மாணவமணிகள் தற்போது செய்யும் சிறு முயற்சிகளும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரும்.  

பரிகாரம்: துர்க்கைக்கு விளக்கேற்றி செவ்வரளி மலரால் அர்ச்சிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 9. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தினரிடம் அன்பு, பாசத்தோடு பழகுவீர்கள். சிலருக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். அலுவலக வேலைகளில்  சந்தோஷமாக ஈடுபடுவீர்கள். வியாபாரிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிறிய இடையூறுகள் ஏற்பட்டாலும் பாதிப்பில்லை. விவசாயிகள் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, வருமானத்தைப் பெருக்கவும். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். பயணங்களால் நன்மை அடைவீர்கள். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். கலைத்துறையினர் தொழிலில் வளர்ச்சியைக் காண்பார்கள். பெண்மணிகளுக்கு நல்லது கெட்டது இரண்டும் கலந்தே வரும். வீண் குழப்பங்களைத் தவிர்ப்பது நல்லது. மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். நீண்டகால திட்டங்களைத் நிறைவேற்ற உரிய நேரமிது. 

பரிகாரம்: அராளகேசி அம்மனுக்கு பௌர்ணமி தினத்தில் நெய் தீபமிடவும். 

அனுகூலமான தினங்கள்: 9, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்)

சிறு சிறு உபாதைகள் உண்டாகும். கவனமாக இருங்கள். எதிலும் நிதானப்போக்கைக் கடைபிடிக்கவும். உறவினர்களால் தொந்தரவு அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் சிறு பூசல்கள் உண்டாகலாம். விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

உத்தியோகஸ்தர்கள் பதவி  உயர்வினைப் பெறுவார்கள். திட்டமிட்ட வேலைகளைச் செய்து முடிப்பதில் காலதாமதம் ஏற்படும். வியாபாரிகள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். கூட்டுத் தொழிலில் இருப்பவர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது. விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். புதிய குத்தகைகளைத் தவிர்க்கவும். 

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சற்றுக் குறைபாடுகள் உண்டாகும். தொண்டர்களின் பாராமுகத்தை மனதில் வைக்காமல் செயலாற்றவும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளை நன்றாக ஆலோசித்தப்பிறகு செயல்படுத்தவும். சக கலைஞர்களின் உதவியால் வாய்ப்புகள் கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் செய்யாத குற்றங்களுக்காக தண்டனைப் பெற நேரிடலாம். எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு அவசியம். "நமசிவாய' மந்திரத்தை ஜெபிக்கவும். 

அனுகூலமான தினங்கள்: 8, 10. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

திட்டமிட்ட பணிகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். வெகுநாள் நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பம் உண்டாகும். பெரியவரின் ஆசிகள் கிட்டும். தாயாரின் உடல்நலத்தைத் கவனிக்கவும். குடும்பத்தில் சிறு மருத்துவச் செலவுகள் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்வரும் இடையூறுகளை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். வியாபாரிகளைத் தேடி பல வகையிலும் லாபம் வரும். வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்த சில சலுகைகளை வழங்குவீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்குத் தக்கவாறு விளைபொருள்களை விற்பனை செய்வார்கள். 

அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியாக பலனளிக்கும். கலைத்துறையினருக்கு முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். அனைத்து வாய்ப்புகளையும் தக்கவைத்துக் கொள்வீர்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை திருப்திகமாக இருக்கும். உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். மாணவமணிகள் படிப்பில் அக்கறை செலுத்தவும். விளையாட்டுப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்: ராமபக்த அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்:  10, 11. 

சந்திராஷ்டமம்: இல்லை.

{pagination-pagination}

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்றாலும் வருமானமும் வந்துக் கொண்டிருக்கும். கடின உழைப்பிற்குப்பிறகே வெற்றி தேடி வரும். நீண்ட கால எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்களின் அன்பும் பாசமும் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். சிறு தொல்லைகள் கொடுத்து வந்த சக ஊழியர்கள் அடங்கிவிடுவார்கள். வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தை திறம்பட நடத்தி வெற்றி பெறுவீர்கள். விவசாயிகள் திருப்திகரமாக இருப்பார்கள். உழைப்பிற்குத் தக்கவாறு பலன் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்திறன் அதிகரிக்கும். தொண்டர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வீர்கள். எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். கலைத்துறையினர் புகழைத் தக்கவைத்துக் கொள்வார்கள். ஆனாலும் வாய்ப்புகள் சுமாராகவே இருக்கும். பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் இருக்கும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பீர்கள். மாணவமணிகள் உழைப்பிற்கு ஏற்ற மதிப்பெண்கள் பெறுவீர்கள். ஆசிரியரின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம்.

பரிகாரம்: பிரதோஷத்தன்று ரத்னகிரீஸ்வரருக்கு மாலை கொடுத்து வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்:  8, 9, 10.

{pagination-pagination}

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்)

புத்திசாலித்தனத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதாரம் சீராகவே இருக்கும். உங்களின் எல்லா செயல்களும் நேர்த்தியாக முடியும். ஆற்றலும் தைரியமும் கூடும். உடன்பிறந்தோர் வகையில் சிறப்புகள் கூடும். வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் வேலைகளை கச்சிதமாகப் புரிந்து கொண்டு செயல்படவும். சக ஊழியர்களின் ஆதரவு இருக்கும். எடுத்த காரியங்கள் பிரச்னையின்றி முடியும். வியாபாரிகள் புதிய யுக்திகளைப் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள். போட்டி பொறாமைகள் கூடுதலாக இருக்கும் என்பதால் எதிலும் கவனம் தேவை. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும்.  

அரசியல்வாதிகள் எடுத்த காரியங்கள் அனைத்தையும் எளிதில் முடித்து வெற்றியடைவார்கள். கட்சியில் முக்கியமான சில பொறுப்புகளையும் பெறுவீர்கள். கலைத்துறையினர் தடைகளைத்தாண்டி, புதிய ஒப்பந்தங்கள் பெறுவார்கள். 

பெண்மணிகளுக்கு கணவருடன் ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி காணப்படும். மாணவமணிகளுக்கு படிப்பில் சிறிய தேக்கநிலை உண்டாகும். கவனத்துடன் படித்தால் எதிர்பார்த்த மதிப்பெணகள் கிடைக்கும்.

பரிகாரம்: சிவபெருமானையும் காலபைரவரையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 5, 13. 

சந்திராஷ்டமம்:  11, 12.

 {pagination-pagination}

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்)

சுப விரயங்கள் உண்டாகும். உறவினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அகலும். புதிய முயற்சிகளுக்குச் செயல்வடிவம் கொடுக்க முனைவீர்கள். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். மனதில் உள்ள தீய எண்ணங்களைத் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்புகள் நீங்கி, நட்போடு நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு திட்டமிட்டபடி வருவாய் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். விவசாயிகள் போட்டிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பார்கள். 

அரசியல்வாதிகள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பார்கள். கட்சியின் கட்டளைகளை நிறைவேற்றுவார்கள். கலைத்துறையினரின் கனவுகளும் திட்டங்களும் பலிக்கும். நண்பர்களின் உதவி கிடைக்கும். பெண்மணிகள் சலன புத்தியைத் தவிர்க்கவும். இல்லத்தில் அமைதி உண்டு. 

கணவரிடம் கோரிக்கையை நிறைவேற்றவும். மாணவமணிகள் வருங்காலத்திற்குச் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கணிதப் பாடங்களில் ஆற்றல் அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாயன்று செந்திலாண்டவரை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்:  13,  14.

{pagination-pagination}

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். பொருள் வரவு உண்டாகும். உறவினர்களின் நட்பும் ஆதரவும் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். பெரியோர் மற்றும் ஆன்றோர்களின் ஆசியினால் புகழ் உயரும். 

உத்தியோகஸ்தர்கள்  அதிகாரிகளை அனுசரித்துச் சென்று தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக்கொள்ளவும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவவைகளைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளவும். விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும். நீர்ப்பாசன வசதிகளைச் செய்து எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடுவீர்கள்.

அரசியல்வாதிகள் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி வாகை சூடுவர். நண்பர்களால் வாழ்க்கையில் திருப்பங்களைக் காண்பார்கள். கலைத்துறையினர் ரசிகர்களின் ஆதரவுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்வார்கள்.  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பார்கள். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்லவும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். 

பரிகாரம்:  துர்க்கையை "ஜய ஜய துர்க்கா'' என்று ஜபித்தபடியே சுற்றி வரவும்.

அனுகூலமான தினங்கள்: 9, 13.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

புதிய முயற்சிகள் தொடங்கும் முன்பு நன்கு யோசிக்கவும். உறவினர்களின் உதவி கிடைக்காது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். கவனமாக இருக்க வேண்டிய காலம். நிதானமாகவும் பொறுமையாகவும் இருந்து செயலாற்றி வெற்றி காண்பீர்கள். 

உத்தியோகஸ்தர்கள் அனைத்து வேலைகளையும் குறித்த காலத்திற்குள் முடித்து மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

வியாபாரிகளுக்கு மந்த நிலை நிலவும். தொடரும் பிரச்னைகளுக்கு சாதுர்யத்துடன் நிரந்தர தீர்வு காணவும். விவசாயிகள் எதையும் முன்னெச்சரிக்கையுடன் ஆராய்ந்து செயல்பட்டால்  நஷ்டங்களைத் தவிர்க்கலாம். 

அரசியல்வாதிகளின் கடந்த கால உழைப்பிற்கு தற்போது பலனை காணலாம். கட்சி பிரசாரத்திற்காக நேரம் ஒதுக்கவும். கலைத்துறையினர் உழைப்பிற்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவார்கள். சக கலைஞர்களின் உதவி கிடைக்கும். 

பெண்மணிகளுக்கு கணவரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் மதிப்பெண்கள் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டி வரும்.  பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு கிடைக்கும்.

பரிகாரம்:  குரு தட்சிணாமூர்த்தியை வியாழன் தோறும் தீபம் ஏற்றி வணங்கவும்.

அனுகூலமான தினங்கள்:  8, 12.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பதில் சிரமங்கள் ஏற்படும். இருப்பினும் மனஉறுதியுடனும் செயல்களைச் செய்வீர்கள். வீட்டிற்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். பண வரவு  நன்றாக இருக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வும் கிடைக்கும். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். மதிப்பு மரியாதை வளரும். வியாபாரிகள் நன்கு யோசித்த பிறகே புதிய முதலீடுகள் செய்யவும். கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக முடியும். விவசாயிகள் செலவு குறைந்த மாற்றுப் பயிர்களை பயிரிட்டு பலன் பெறலாம். உங்களின் கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். 

அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் சுமுகமாக முடிவடையும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது படும். தொண்டர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும். கலைத்துறையினரைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். விருந்துகளில் உற்சாகமாக கலந்து கொள்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பார்கள். 

குழந்தைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மாணவமணிகள் கடுமையாக உழைத்தால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.

பரிகாரம்:  புதனன்று பெருமாளை வழிபட்டு நலம் பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள்: 13, 14. 

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதங்கள்)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்களை மாற்றியமைத்து வெற்றி அடைவீர்கள். தீயோர்ச் சேர்க்கையை தவிர்க்கவும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை சீராகவே இருக்கும். சந்தோஷத்திற்கும் குறைவு இராது.

உத்தியோகஸ்தர்கள் வேலைகள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிக்கவும். மேலதிகாரிகள் சற்று கடுமையாக நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் சாதுர்யத்துடன் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அள்ளலாம். போட்டிகளைச் சமாளிக்கலாம். விவசாயிகளுக்கு உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலர் புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதைகள் உயரும். கட்சிப்பிரசாரங்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். கலைத்துறையினரின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். 

பெண்மணிகள் கணவருடனும் குடும்பத்தாருடனும் நல்லுறவைக் காண்பார்கள். 

பூர்வபுண்ணிய பலத்தால் தடைகள் கதிரவனைக் கண்ட பனி போன்று விலகும். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே கலந்து கொள்ளவும்.

பரிகாரம்:  விநாயகப் பெருமானை சங்கடஹர சதுர்த்தியன்று வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 10, 14.

சந்திராஷ்டமம்:  இல்லை.

{pagination-pagination}

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

மகிழ்ச்சிகரமான காலம். அனுகூலமான பயணங்கள் ஏற்படும். பொருளாதாரத்தில் சுபிட்சங்கள் கூடும். சில தெய்வ காரியங்களுக்குச் செலவு செய்து பெருமைபடுவீர்கள். உறவினர்களிடம் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி, நட்புடன் நடந்துகொள்வார்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்களில் சாதகமான சூழ்நிலை நிலவும். வாடிக்கையாளர்களைக் கவரும் திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மாற்றுப் பயிர் செய்வதன் மூலம் லாபத்தை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகள் செய்யும் செயல்களில் வெற்றி காண்பர். பெயரும் புகழும் வளரும். கவனத்துடன் செயல்பட்டு கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவார்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். பணவரவு சரளமாக இருக்கும். 

பெண்மணிகள் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வார்கள். மற்றவர்களை அனுசரித்துச் செல்லவும். மாணவமணிகள் சீரிய முயற்சி செய்தால் அதிகமான மதிப்பெண்களைப் பெற முடியும். 

பரிகாரம்:  ஞாயிறன்று சூரிய வழிபாடும் துர்க்கை வழிபாடும் நல்லது. 

அனுகூலமான தினங்கள்: 10, 13.

சந்திராஷ்டமம்:  இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com