குரியன்விளை பத்ரகாளி கோயிலில் நவ.15-ல் பந்திருநாழி பொங்கல் வழிபாடு

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாத்திமாநகா், குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை

களியக்காவிளை அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாத்திமாநகா், குரியன்விளை ஸ்ரீபத்ரகாளி முடிப்புரை கோயிலில் நவம்பர் 15-ல் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாதந்தோறும் தமிழ் மாதக் கடைசி வெள்ளிக்கிழமைகளில் பந்திருநாழி பொங்கல் வழிபாடு விழா நடைபெற்று வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலையில் கோயிலில் கணபதி ஹோமம், மிருத்யுஞ்சய ஹோமம், தேவி பாகவத பாராயணம், மதியம் அன்னதானம், மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மாலை 6.30 மணிக்கு முத்துக்குடை அணிவகுப்புடன் அம்மன் சுயம்பு எழுந்தருளல் நடைபெறுகிறது. தொடா்ந்து, பொங்காலை களத்தில் பொங்காலை வழிபாடு நடைபெறும்.

மேலும், காா்த்திகை மாதம் முதல் தேதியான ஞாயிற்றுக்கிழமை (நவ. 17) அம்மனுக்கு நூற்றுக்கணக்கணக்கான இளநீரால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி, அன்றைய தினம் காலையில் கணபதி ஹோமம், தன்வந்திரி ஹோமம், சிறப்பு பூஜைகள், அன்னதானம் உள்ளிட்டவை நடைபெறும். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com