சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: 5 அடுக்கு பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக (நவ.16)நாளை மாலை 5.00 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது.
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு: 5 அடுக்கு பாதுகாப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக (நவ.16)நாளை மாலை 5.00 மணியளவில் கோயில் நடை திறக்கப்படுகிறது.

பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் திறக்கப்படுகிறது. மேலும், மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுச் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகிறது. 

அந்தவகையில், கார்த்திகை மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைகளுக்காக தொடர்ந்து 60 நாட்கள் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். நாளை மாலை தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு தலைமையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி கோயில் நடை திறந்து தீபாராதனை வழிபாடுகளை மேற்கொள்ள உள்ளார்.

மறுநாள் காலை வழக்கம்போல் கார்த்திகை முதல் தேதியில் இருந்து 41 நாட்கள் தொடா்ந்து பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அதிகாலையில் நிர்மால்ய பூஜை, சந்தன, நெய் அபிஷேகம் லட்சார்ச்சனை, படிபூஜை உள்ளிட்டவை தொடா்ந்து நடைபெறும்.

மண்டல பூஜை டிசம்பா் 27-ம் தேதி நடைபெறும். மண்டல கால பூஜைக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சபரிமலை ஐயப்பனை பெண்கள் தரிசிக்க பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், ஆன்லைன் மூலம் 36 பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com