சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல 2-வது நாளாக பக்தர்களுக்குத் தடை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல 2வது நாளாக பக்தர்களுக்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல 2-வது நாளாக பக்தர்களுக்குத் தடை!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல 2வது நாளாக பக்தர்களுக்கு இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

வத்திராயிருப்பு அருகே பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம், ஆகிய நாள்கள் மட்டுமே பக்தா்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை அனுமதி அளிக்கிறது.

இந்நிலையில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் நேற்று அதிகாலை 5 மணி முதல் சதுரகிரி கோயில் நுழைவு வாயிலில் காத்திருந்தனர். ஆனால் சாரல் மழை பெய்துவந்ததால் வனத்துறையினா் கோயிலுக்குச் செல்ல அனுமதி மறுத்தனா்.

அமாவாசையை முன்னிட்டு வனத்துறையினர் அனுமதிக்காக பக்தர்கள் காத்திருந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் மழை பெய்து வருகின்றது. இதனால், மலைக்கோயிலுக்குச் செல்லமுடியாமல் ஏராளமான பக்தா்கள் மலை அடிவாரத்திலேயே ஏமாற்றத்துடன் காத்திருக்கின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com