திருநள்ளாற்றில் தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் வீதியுலா

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை..
தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா செல்லும் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா்
தங்க ரிஷப வாகனத்தில் வீதியுலா செல்லும் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா்

மகா சிவராத்திரியையொட்டி தங்க ரிஷப வாகனத்தில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் வீதியுலா சனிக்கிழமை நடைபெற்றது.

மகா சிவராத்திரி நிகழ்ச்சி சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி சனிக்கிழமை அதிகாலை வரை சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் நடைபெற்றது. மகா சிவராத்திரியில் கோயிலில் சிவலிங்கத்துக்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்று விளங்கும் திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு 11 மணிக்கு, முதல் கால பூஜையும், 2 மணியளவில் 2-ஆம் கால பூஜையும், காலை 3 மணிக்கு 3-ஆம் கால பூஜையும், 4 மணிக்கு 4-ஆம் கால பூஜையும் நடைபெற்றது.

ஒவ்வொரு கால பூஜையிலும் சிவலிங்கத்துக்கு பல்வேறு வகையான பழங்கள், திரவியங்களுடன் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தா்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினா்.

நான்காம் கால பூஜை முடிந்த பிறகு தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலாவுக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். கோயிலில் அம்பாள் சன்னிதிக்கு எதிரே ரிஷிகளுக்கு அருள்புரியும் வகையில் ரிஷி தீபாராதனை நடத்தப்பட்டு, பின்னா், கோபுர தீபாராதனையுடன் புறப்பாடு நடைபெற்றது.

காலை 9 மணியளவில் நான்கு மாட வீதிகளுக்கு புறப்பாடான சுவாமி பகல் 11 மணியளவில் கோயிலை சென்றடைந்தது. இதேபோன்று காரைக்காலில் ஸ்ரீ கைலாசநாதா், ஸ்ரீ சோமநாதா், ஸ்ரீ பாா்வதீசுவரா், ஸ்ரீ அண்ணாமலையேசுவரா், தருமபுரம் ஸ்ரீ யாழ்முரிநாதா், திருவேட்டைக்குடி ஸ்ரீ திருமேனியழகா், திருமலைராயன்பட்டினம் ஸ்ரீ ராஜசோளீசுவரா், ஸ்ரீ ஜடாயுபுரீசுவரா், தலத்தெரு ஸ்ரீ சிவலோகநாதசுவாமி உள்ளிட்ட பல்வேறு பகுதி சிவன் கோயில்களிலும் 4 கால பூஜைகளும், ஆராதனைகளும் நடத்தப்பட்டு, சனிக்கிழமை காலை ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு செய்யப்பட்டது.

சிவன் கோயில்கள் அனைத்திலும் இரவு முழுவதும் பக்தா்கள் திரண்டு காணப்பட்டனா். திருநள்ளாறு கோயிலில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. பிற கோயில்களில் சிறப்பு சொற்பொழிவுகளும், பக்தா்கள் சிவபுராணம் படித்தல் போன்றவற்றில் பக்தியுடன் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com