ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாளை குண்டம் திருவிழா

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா 24-ம் தேதி(நாளை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாளை குண்டம் திருவிழா

ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா 24-ம் தேதி(நாளை) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 

ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாசாணியம்மன் குண்டம் திருவிழாவுக்காக சர்க்கார்பதி வனப்பகுதியிலிருந்து மூங்கில் கொண்டுவரப்பட்டு, கம்பம் அலங்கரிக்கப்பட்டு மாசாணியம்மன் கோவிலுக்குக் கொண்டுவரப்படும். 

அதன்படி, இந்தாண்டு குண்டம் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்காக கம்பம் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக இன்று கோயிலுக்குக் கொண்டுவரப்பட்டது. ஆழியாறு ஆற்றுப்படுகையில் நாளை கம்பத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, காலை 9 மணியளவில் கொடியேற்றம் நடக்கிறது. 

பிப்.6-ம் இரவு மயான பூஜையும், பிப்.9-ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். இறுதியாக அம்மனுக்கு பிப்.11-ம் தேதி மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com