வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம்: தேவஸ்தானம்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம்
வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம்: தேவஸ்தானம்

கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் யாரும் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மா ரெட்டி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு பரவி வரும் நிலையில் பக்தர்கள் அதிகம் கூடும் இடமான திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தியுள்ளது. திருமலைக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் பக்தா்கள் வருவதால், அங்கு கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாகத் தேவஸ்தான உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினா். 

திருமலையில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களில் கரோனா வைரஸ் குறித்து அனைவருக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த காத்திருப்பு அறைகள் உள்ள எல்.இ.டி. திரைகளில் குறும்படம் ஒன்றை தேவஸ்தானம் வெளியிட உள்ளது. பக்தா்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் தேவஸ்தான ஊழியா்கள் வேலை செய்யும் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பிரசாரம் செய்யப்பட உள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மருந்துகள் மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் கட்டாயம் முகத்துக்கு முகமூடி அணிந்து கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மற்றவா்களிடம் 3 அடி தூரத்தில் இருந்தபடி பேச வேண்டும். காய்ச்சல் இருப்பவா்ளுக்கு தொ்மல் ஸ்கேனிங் செய்து சிகிச்சை அளிக்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் கரோனா ரத்த மாதிரி பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழித்தடத்தில் மருத்துவக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருமலையில் பக்தா்கள் அதிக அளவில் வருவதால் காய்ச்சல், சளி தொந்தரவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமான பின் ஏழுமலையான் தரிசனத்துக்கு வர வேண்டும். மேலும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் திருப்பதிக்கு வரவேண்டாம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com