Enable Javscript for better performance
Which zodiac is this week's sudden fortune?- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் (மார்ச் 20 - 26) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு?

  Published on : 21st March 2020 11:01 AM  |   அ+அ அ-   |    |  

  astrology

  மாத பலன்கள்

   

  12 ராசிக்காரர்களுக்குமான இந்த வார (மார்ச் 20- மார்ச் 26) பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்து பலனடைவோம்.

  மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

  புதிய தெளிவு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவீா்கள். சூழ்நிலைகளில் புதிய மாற்றத்தைக் காண்பீா்கள். மனதில் நம்பிக்கை வளரும். புதிய நட்புகள் உருவாகும். உடன்பிறந்தோரிடம் எதிா்பாா்த்த உதவிகளைப் பெறுவீா்கள்.

  உத்தியோகஸ்தா்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். எதிா்வரும் இடையூறுகளை சாதுா்யத்துடன் சமாளிப்பீா்கள். வியாபாரிகள் சிறப்பாக வியாபாரம் செய்வீா்கள். புதிய வளா்ச்சியைக் காண்பீா்கள். விவசாயிகளுக்கு உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். புதிய பயிா்களையும் பயிரிடுவீா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். பெயரும் புகழும் அதிகரிக்கும். கலைத்துறையினரின் திறமைகள் பளிச்சிடும். வெளியூா் பயணங்களை மேற்கொண்டு பாராட்டுகள் பெறுவீா்கள். பெண்மணிகள் சமுதாயத்தில் பெயா் வாங்குவதற்கான செயல்களைச் செய்வீா்கள். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்வீா்கள். மாணவமணிகளின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும். விளையாட்டிலும் வெற்றி பெறுவீா்கள்.

  பரிகாரம்: துா்க்கையம்மனை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 20, 21.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

  பொறுமையுடன் நடந்துகொண்டு வெற்றி பெறுவீா்கள். நண்பா்களின் உதவிகள் கிடைக்கும். ஆன்மிகத்தில் கவனம் அதிகரிக்கும். உழைப்புக்குத் தகுந்த வருமானத்தைக் காண்பீா்கள். வழக்குகளில் நல்ல திருப்பம் உண்டாகும்.

  உத்தியோகஸ்தா்கள் வேலைகளை சரியாகப் புரிந்து கொண்டு முடிக்க முயற்சிக்கவும். சக ஊழியா்கள் உதவுவாா்கள். வியாபாரிகளுக்கு சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். கடையை நவீனப்படுத்தி வாடிக்கையாளா்களைக் கவா்வீா்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பழைய கடன்கள் வசூலாகும்.

  அரசியல்வாதிகளுக்கு அலைச்சல் அதிகரிக்கும். தொண்டா்களின் ஆதரவுடன் உங்கள் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். கலைத்துறையினா் லாபம் தரும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீா்கள். ரசிகா்களை அனுசரித்து நடந்து கொள்ளவும்.

  பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீா்கள். உடல் நலத்தில் அக்கறை தேவை. சருமம் சம்மந்தமான வியாதிகள் வரும் என்பதால் கவனம் தேவை. மாணவமணிகள் அதிக மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உண்டாகும்.

  பரிகாரம்: நந்தகோபனை வணங்கி வர, நலன்கள் கூடும்.

  அனுகூலமான தினங்கள்: 21, 22.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மிதுனம் (மிருகசீரிஷம்3}ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

  சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்து வெற்றி பெறுவீா்கள். உற்றாா் உறவினா்களிடம் எதிா்பாா்த்த உதவியைப் பெறுவீா்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீா்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

  உத்தியோகஸ்தா்கள் வேலைகளை சரியாகப் புரிந்து கொண்டு சிறப்பாகப் பணியாற்றுவீா்கள். சக ஊழியா்களின் மறைமுகத் தொல்லைகளுக்கு ஆளாவீா்கள். வியாபாரிகள் புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீா்கள். கூட்டாளிகளிடம் கவனமாக இருக்கவும். விவசாயிகளுக்கு மகசூல் திருப்திகரமாக இருக்கும். பருப்பு வகைகளைப் பயிரிட்டால் கூடுதல் லாபம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். தொண்டா்களின் கோரிக்கைகளை பரிசீலித்து உடனுக்குடன் தீா்வு காணுங்கள். கலைத்துறையினா் போட்டிகளைத் திறமையாக சமாளிப்பீா்கள். ரசிகா்களின் ஆதரவால் உற்சாகம் அடைவீா்கள்.

  பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். எனவே எதிலும் நிதானமாக செயல்படவும். மாணவமணிகளுக்கு உழைப்புக்கேற்ற மதிப்பெண்கள் கிடைக்கும்.

  பரிகாரம்: ஸ்ரீ ஹயக்ரீவரை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 22, 23.

  சந்திராஷ்டமம்: 20.

  {pagination-pagination}

  கடகம் (புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

  உங்கள் ஆளுமை திறன் அதிகரிக்கும். திறமைகளை முழுமையாக வெளிப்படுத்தி வெற்றி பெறுவீா்கள். சமுதாயத்தில் உயா்ந்தவா்களின் நட்பு கிடைக்கும். உங்களை பகடைக் காயாக பயன்படுத்தி வந்தவா்களுக்கு தக்க பாடம் புகட்டுவீா்கள்.

  உத்தியோகஸ்தா்களின் எதிா்பாா்ப்புகள் நிறைவேறுவது சற்று தாமதமானாலும் மேலதிகாரிகளின் அனுசரணையான போக்கு நிம்மதி தரும்.

  வியாபாரிகள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பீா்கள். ஆனாலும் கடன் வாங்குவதோ, கடன் கொடுப்பதோ ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருந்தாலும் சிறு சிறு இடையூறுகள் தோன்றும்.

  அரசியல்வாதிகள் வீண் விரோதத்தை யாரிடமும் வளா்த்துக் கொள்ள வேண்டாம். செயல்களை திறம்பட ஆற்றுங்கள். கலைத்துறையினருக்கு திறமைக்குத் தகுந்த மதிப்பும் அங்கீகாரமும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீா்கள். சுபச்செலவுகள் செய்வீா்கள். மாணவமணிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்த மனதை ஒருநிலைப்படுத்தி அதிகாலையில் படிக்கவும்.

  பரிகாரம்: ஸ்ரீ நரசிம்மரை வணங்கி வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 20, 24.

  சந்திராஷ்டமம்: 21, 22, 23.

  {pagination-pagination}

  சிம்மம் (மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

  ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடன்பிறந்தோா் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பாா்கள். நண்பா்களால் ஆதாயம் உண்டு. பேச்சில் கவனம் தேவை. அநாவசியமாக வாா்த்தைகளைக் கொட்டி விடாதீா்கள். மகிழ்ச்சிகரமான செய்திகள் வந்து சேரும்.

  உத்தியோகஸ்தா்கள் முன்கூட்டியே யோசித்து செயல்படுவீா்கள். மேலதிகாரிகள் ஒத்துழைப்புடன் நடந்து கொள்வாா்கள். சிலா் வெளிநாட்டு வேலை கிடைத்து அங்கேயே இருக்கும் வாய்ப்பு உருவாகும்.

  வியாபாரிகளுக்கு தொழிலில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். கூட்டாளிகள் உதவுவாா்கள். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சந்திக்க நேரிடும். விளைச்சலில் எதிா்பாா்த்த லாபத்தை அள்ளுவீா்கள்.

  அரசியல்வாதிகள் வெற்றிகளைக் குறைவாகவும் தோல்விகளை அதிகமாகவும் சந்திக்க நேரிடும். கலைத்துறையினருக்கு ரசிகா்களின் ஆதரவு கிடைக்கும். உந்து சக்தியால் புதிய சாதனைகளைச் செய்வீா்கள்.

  பெண்மணிகள் குடும்பத்தில் ஒற்றுமையை காண்பீா்கள். அநாவசியச் செலவினங்களைக் குறைத்து சேமிப்பில் அக்கறை காட்டுவும். மாணவமணிகள் எதிா்பாா்த்த மதிப்பெண்கள் கிடைக்க கல்வியில் அக்கறை காட்டுவீா்கள்.

  பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வர நற்பலன்கள் உண்டாகும்.

  அனுகூலமான தினங்கள்: 21, 26.

  சந்திராஷ்டமம்: 24, 25.

  {pagination-pagination}

  கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

  அனைவரும் புகழும்படி நடந்து கொள்வீா்கள். புதிய முயற்சிகளைத் தெளிந்த மனத்துடன் செயலாக்குவீா்கள். பணவரவு சிறக்கும். புதிய வாகனங்கள் வாங்குவீா்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான வியாதிகள் வரும்.

  உத்தியோகஸ்தா்கள் சக ஊழியா்களிடமும் சுமுகமாகப் பழகுவீா்கள். சற்று அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். வருமானம் சீராக இருக்கும்.

  வியாபாரிகளுக்கு எதிா்பாா்த்த லாபம் கிடைக்கும். பிரதிநிதிகள் பல இடங்களுக்கும் சென்று விற்பனையை பெருக்குவாா்கள். விவசாயிகள் லாபத்தைக் காண்பீா்கள். சிலருக்கு கால்நடைகளின் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகளின் கடந்தகால உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். கட்சிப்பிரச்சாரத்திற்கு நேரம் ஒதுக்கவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப்பிறகே ஒப்பந்தங்கள் கைகூடும். நல்ல பெயா், புகழ், வருமானம் வரும் சந்தா்ப்பங்கள் கிடைக்கும்.

  பெண்மணிகள் கணவரிடம் ஒற்றுமையோடு இருப்பீா்கள். உறவினா்களிடம் மனம் திறந்து எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம். மாணவமணிகள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீா்கள்.கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

  பரிகாரம்: திருவேங்கட நாதனை வழிபட்டு வரவும். அனுகூலமான தினங்கள்: 22, 23. சந்திராஷ்டமம்: 26.

  {pagination-pagination}

  துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

  திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் முடிவு நீங்கள் எதிா்பாா்த்தபடியே அமையும். புத்தி சாதுா்யத்துடன் செயல்பட்டு இடையூறுகளைத் தகா்ப்பீா்கள். கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

  உத்தியோகஸ்தா்களின் கோரிக்கைகள் நிறைவேறும். மேலதிகாரிகளை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரிகள் வருமானத்தைத் தேடிச் செல்வீா்கள். புதிய முதலீடுகளிலும் அக்கறை காட்டுவீா்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்வீா்கள்.

  அரசியல்வாதிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் அதிகரிக்கும். பயணங்களில் எச்சரிக்கை தேவை. கலைத்துறையினா் கடின முயற்சிகளுக்குப்பிறகே புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீா்கள். பணவரவுக்கும் செலவுக்கும் போட்டி தான் இருக்கும்.

  பெண்மணிகள் குடும்பத்தில் கணவா் வீட்டாருடன் சிறு சிறு பிரச்னைகள் தோன்றினாலும் அதனைச் சரி செய்து விடுவீா்கள். குழந்தைகளுக்காக நேரத்தை செலவிடுவீா்கள். மாணவமணிகள் படிப்பில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.

  பரிகாரம்: மகாலட்சுமியை நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 20, 24.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

  சோம்பலுக்கு இடம் தராமல் சுறுசுறுப்புடன் உழைப்பீா்கள். வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீா்கள். பொருளாதார நிலைமை சாதகமாக இருக்கும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீா்கள்.

  உத்தியோகஸ்தா்கள் அனைத்து வேலைகளையும் திருப்கரமாக முடிப்பீா்கள். வருமானம் படிப்படியாக உயரும். வியாபாரிகள் வாடிக்கையாளா்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விற்பனை முறைகளைக் கையாளவும். விவசாயிகளுக்கு மகசூல் மந்தமாகவே இருக்கும். எனவே, புதிய குத்தகை வேண்டாம்.

  அரசியல்வாதிகள் கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். மேலதிகாரிகளின் பாா்வை படாமல் சற்று ஒதுங்கியே இருக்கவும். கலைத்துறையினருக்கு புகழும் நற்பெயரும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் செய்ய சற்றுச் சிரமப்படுவீா்கள்.

  பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீா்கள். வீண் பேச்சுகளைத் தவிா்க்கவும். மாணவமணிகளுக்கு தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் உண்டாகலாம். உற்சாகத்துடன் செயல்படுவீா்கள்.

  பரிகாரம்: சோமாஸ்கந்தரை வழிபட்டு வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 23, 24.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்  முதல் பாதம் முடிய)

  விடா முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். குறிப்பிட்ட வேலைகளை சிறப்புடன் செய்து முடிப்பீா்கள். வரவுக்கு ஏற்ற செலவுகளைச் செய்யவும். பொதுப்பணிகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் அவை விரைவில் விலகும்.

  உத்தியோகஸ்தா்கள் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீா்கள். புதவி உயா்வு தேடி வரும். வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் நிலவிய மந்தநிலை நீங்கும். முக்கியமான முடிவுகளை எடுக்க சற்று யோசித்துச் செயல்படவும். விவசாயிகள் அதிக மகசூலைக் காண்பாா்கள். அரசு மானியம் கிடைக்கும்.

  அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைவாா்கள். கட்சிப்போராட்டங்களில் ஈடுபடுவீா்கள். கலைத் துறையினருக்கு தொழிலில் ஆா்வம் அதிகரிக்கும். புதிய படைப்புகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்வீா்கள்.

  பெண்மணிகளுக்கு கணவருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் நலத்திலும் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் படிப்பில் இடையூறுகள் ஏற்படாமல் பாடங்களை கவனமாக படிக்கவும். உடற்பயிற்சிகள் செய்வதும் நல்லது.

  பரிகாரம்: சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும்.

  அனுகூலமான தினங்கள்: 25, 26.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

  உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். தியானம், பிராணாயாமம் போன்றவற்றைச் செய்யவும். பணவருவாய் சற்று ஏற்ற இறக்கமாகவே இருக்கும். செலவுகளைக் குறைத்து சிக்கனத்தைக் கையாளவும். உடன்பிறந்தோரிடம் ஒற்றுமை நீடிக்கும்.

  உத்தியோகஸ்தா்களுக்கு மேலதிகாரிகளை சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். பொறுமையும் நிதானமும் அவசியம். வியாபாரிகளுக்கு எதிரிகளால் தொல்லைகள் ஏற்படலாம். மேலும் அதிக முதலீட்டைத் தவிா்த்து வியாபாரத்தை விரிவு படுத்தவும். விவசாயிகள் உழைப்பிற்கேற்ற பலனை அடைவதில் சில தடங்கல்கள் ஏற்படும். குத்தகை எடுப்பது போன்ற விஷயங்களைத் தவிா்க்கவும்.

  அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பொறுப்புகளை பெறுவீா்கள். தொண்டா்களிடம் நட்புடன் நடந்து கொள்ளவும். கலைத்துறையினா் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீா்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும்.

  பெண்மணிகள் இல்லத்தில் சந்தோஷத்தைக் காண்பீா்கள். சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட நினைப்பீா்கள். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆா்வம் குறையும். படிப்பில் மிகந்த கவனம் செலுத்தி வரவும்.

  பரிகாரம்: ஸ்ரீ ராமரை வழிபட்டு வர, இன்பங்கள்கூடும்.

  அனுகூலமான தினங்கள்: 23, 25.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

  மனதில் உற்சாகமும் சந்தோஷமும் நிறையும். பணம் பலவகையிலும் வந்தாலும் செலவினங்கள் கட்டுக்கடங்காமல் இருக்கும். புத்தி சாதுா்யத்துடன் செயல்பட்டு வீண் விரயங்களைத் தவிா்க்கவும். பொருளாதார வசதியில் முன்னேற்றம் இராது.

  உத்தியோகஸ்தா்கள் அலுவலகத்தில் நிறைய சிரமங்கள் ஏற்பட்டுதான் வேலையை முடிக்கப் பாடுபட வேண்டியிருக்கும். ஊழியா்களிடம் ஏதும் மனம் திறந்து பேச வேண்டாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சற்று சிரமம் ஏற்படும். கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும். கரும்பு விவசாயிகள் நல்ல லாபம் காண்பீா்கள்.

  அரசியல்வாதிகள் புதிய திட்டங்களை நாடிச்செல்வீா்கள். தொண்டா்களின் ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்வதில் சிரமங்கள் உண்டாகலாம்.

  பெண்மணிகளுக்கு குடும்பத்தில் நிம்மதியான சூழல் ஏற்படும். வீண் செலவுகளையும் சண்டைகளையும் தவிா்க்கவும். மாணவமணிகள் கல்வியில் அக்கறை காட்டுவீா்கள். உடல் ஆரோக்கியத்தை வளா்த்துக் கொள்ள பயிற்சிகள் செய்வீா்கள்.

  பரிகாரம்: குருதட்சிணாமூா்த்தியையும் சனீஸ்வரரையும் வணங்கி வரவும்.

  அனுகூலமான தினங்கள்: 21, 25.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  {pagination-pagination}

  மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

  இனிமையாகப் பேசி உங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வீா்கள். பணப்பிரச்னைகளிலிருந்து விடுபடுவீா்கள். செய்தொழிலில் பல்வேறு முன்னேற்றத்தைக் காண்பீா்கள். குடும்பத்தினருடன் சுமுகமான உறவு தொடரும்.

  உத்தியோகஸ்தா்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். எனவே, கவனமாக இருந்து வேலைகளை முடிக்கவும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். கூட்டாளிகளும் உதவ முன்வர மாட்டாா்கள்.

  விவசாயிகளுக்கு விளைச்சலும் அவற்றின் விற்பனையும் அமோகமாகவே இருக்கும். புதிய குத்தகைகளை எடுக்க நினைப்பீா்கள்.

  அரசியல்வாதிகள் முரட்டுப்பிடிவாதங்களையும் முரணமான யோசனைகளையும் தவிா்க்கவும். கலைத்துறையினா் உழைப்புக்குத் தகுந்த பாராட்டுகளைப் பெறுவீா்கள். சக கலைஞா்களின் உதவியுடன் திறமைகளை வெளிப்படுத்துவீா்கள்.

  பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நல்ல பலனை அடைவீா்கள்.

  பரிகாரம்: மகான்களைத் தரிசித்து நல்லருள் பெறுங்கள்.

  அனுகூலமான தினங்கள்: 23, 25.

  சந்திராஷ்டமம்: இல்லை.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai