வீரராகவ பெருமாள் கோயிலில் மே 1 முதல் சித்திரை மாத பிரம்மோற்சவம்

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் வரும் மே 1-ஆம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
கோயிலில் சுவாமி உலா வரும் வாகனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.
கோயிலில் சுவாமி உலா வரும் வாகனங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் வரும் மே 1-ஆம் தேதி தொடங்கி, 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
வீரராகவ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் தை, சித்திரை மாதங்களில் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை மாத பிரம்மோற்சவம் வரும் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
விழாவையொட்டி, முதலாம் நாள் காலையில், துவஜரோஹனம், தங்க சப்பரம், இரவு சிம்ம வாகன வீதியுலா நடைபெறுகிறது.
இரண்டாம் நாள் காலையில் அம்ச வாகனம், இரவு சூரிய பிரபை வாகன வீதியுலாவும், 3-ஆம் நாள் காலையில் கருட சேவை, இரவு ஹனுமந்த வாகன வீதியுலாவும் நடைபெறுகிறது. 4-ஆம் நாள் காலை
சேஷவாகனம், இரவு சந்திரபிரபை, 5-ஆம் நாள் நாச்சியார் திருக்கோலம், இரவு யாளி வாகன வீதியுலா நடைபெறுகிறது. 6-ஆம் நாள் காலை வெள்ளிச்சப்பரம், வேணுகோபால் திருக்கோலம், 7-ஆம் நாள் காலை முதல் மாலை வரை தேர் திருவிழா நடைபெறுகிறது.
8-ஆம் நாள் காலை திருப்பாதம் சாடி திருமஞ்சனம், இரவு குதிரை வாகனம், 9-ஆம் நாள் காலை தீர்த்தவாரி, ஆல்மேல் பல்லக்கு, இரவு விஜயகோடி விமானம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கடைசி நாளான 10-ஆம் தேதி காலையில் திருமஞ்சனம், இரவில் கண்ணாடி பல்லக்கு ஆகியவற்றுடன் சித்திரை மாத பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
விழாவின் இடையே மே 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை ஸ்ரீராமானுஜர் ஜயந்தி விழாவும், இசை நிகழ்ச்சிகள், ஆன்மிக கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com